Published : 18 Aug 2016 10:27 AM
Last Updated : 18 Aug 2016 10:27 AM

மகாராஷ்டிராவில் ஜன்மாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழாவில் மனித கோபுரம்: கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் உறியடி திருவிழாவுக்கு மனித கோபுரம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தாஹி-ஹேண்டி எனப்படும் உறியடி திருவிழாவின்போது மனித கோபுரம் அமைப்பதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. மனித கோபுரம் அமைக்கும் விளையாட்டில் 18 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்துவதில் மகாராஷ்டிர அரசு தோல்வியடைந்துவிட்டது. எனவே, மகாராஷ்டிர அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஆர் தவே, எனல் நாகேஷ்வர ராவ் ஆகியோரடங்கிய அமர்வு, 18 வயதுக்கு உட்பட்ட யாரும் உறியடி திருவிழாவில் மனித கோபுரம் அமைக்கும் விளையாட்டில் பங் கேற்கக் கூடாது. மனித கோபுரத்தின் அதிகபட்ச உயரம் 20 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என உத்தரவிட்டது.

முன்னதாக, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தது. அதனை உச்ச நீதிமன்றம் நிரா கரித்து விட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பொருந்தக் கூடியதல்ல என மாநில அரசு வாதிட்டது. முந்தைய உத்தர வில் மனித கோபுரத்தின் உயரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தவில்லை. தங்களின் உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திக் கொள்ளும்படி மாநில அரசை மும்பை உயர் நீதி மன்றம் கேட்டுக் கொண்டது. தற் போதை உத்தரவில் மும்பை உயர் நீதிமன்றத்தின் 2014-ம் ஆண்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் பின்பற்றும்படி நீதிபதிகள் தெளிவாக உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x