Published : 21 Jun 2016 09:08 AM
Last Updated : 21 Jun 2016 09:08 AM

வனவிலங்குகளை கொல்ல அனுமதி: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீலா மான்கள், குரங்கு, காட்டுப் பன்றி ஆகியவற்றை கொல்ல மத்திய அரசு அளித்த அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து ஊருக் குள் புகுந்து விளைநிலங்களை நாசப்படுத்தி மனிதர்களையும் தாக்குவதால் பிஹாரில் நீலா மான்கள், காட்டுப் பன்றிகள், இமாச்சல் மற்றும் உத்தராகண்டில் குரங்குகள் ஆகிய தீங்கு விளைவிக்கும் வனவிலங்குகளை ஓராண்டு வரை கொல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்களும், எதிர்க்கட்சியின ரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விளக்கம் அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘தீங்கு விளைவிக்கும் என அடை யாளப்படுத்தப்பட்ட விலங்கை குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே வேட்டை யாட அனுமதிக்கப்படுகிறது’’ என தெரிவித்தார்.

எனினும் இதை ஏற்காத விலங்கு கள் நல ஆர்வலர்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமை யிலான அமர்வு தீங்கு விளைவிக் கும் விலங்குகளை கொல்வதற்கு மத்திய அரசு பிறப்பித்த அனுமதிக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. எனினும் மத்திய அரசிடம் தங்களது குறைகளை தெரிவித்து மனு அளிக்கலாம் என விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இரு வாரங்களுக்குள் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. பின்னர் இம்மனு மீதான விசாரணையை வரும் ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரேவர் மற்றும் சித்தார்த் லுத்ரா, ‘‘விலங்குகளால் மனிதர் களுக்கு ஏற்படும் ஆபத்து தொடர் பாக எந்தவொரு ஆய்வும் நடத்தப் படாமல் கொல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக விசாரிக்காமல் பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கொல்வது சட்ட விரோதமானது. மேலும் சில வகை விலங்கினங்களை வேட்டையாடு வதன் மூலம் அதன் இனமே கணிச மாக குறையும் அபாயம் ஏற்படும். மத்திய அரசின் இந்த அனுமதியை பயன்படுத்தி உள்ளூரில் உள்ள வர்களும், வேட்டைக்காரர்களும், அதிக அளவில் விலங்குகளை கொல்லக் கூடும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x