Last Updated : 12 Jul, 2016 10:03 AM

 

Published : 12 Jul 2016 10:03 AM
Last Updated : 12 Jul 2016 10:03 AM

ஏகிகிரண் சமிதி தலைவர் வசுந்த்ராவ் காலமானார்: கர்நாடகாவில் கடைகள் அடைப்பு

கர்நாடக மாநிலம் பெல்காமில் மகாராஷ்டிர ஏகிகிரண் சமிதியின் தலைவர் வசுந்த்ராவ் பரஷராம் பாட்டீல் (78) நேற்று காலமானார். இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டு, வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.

பெல்காமில் உள்ள கானாப் பூரில் 1938-ம் ஆண்டு வசுந்த்ராவ் பரஷராம் பாட்டீல் பிறந்தார். சிறு வயதிலேயே மகாராஷ்டிர ஏகிகிரண் சமிதியில் இணைந்த இவர், மராத்தி மொழியின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக மகா ராஷ்டிர ஏகிகிரண் சமிதியின் தலைவராகவும் பதவி வகித்தார்.

கடந்த 1983 மற்றும் 1985-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.

சிறந்த பேச்சாளரான வசுந்த் ராவ், சட்டப்பேரவையில் தனது தாய்மொழியான மராத்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண் டார். இதனால் கோபம‌டைந்த கன்னட உறுப்பினர்கள் அவரை தாக்க முற்பட்டதால் அப்போது பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த‌ வசுந்த்ராவ், பெல்காமில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவால் பெல்காமில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.

மகாராஷ்டிர எல்லையில் உள்ள பல கிராமங்களில் உள்ள வீடுகளில் சோகத்தை வெளிப் படுத்தும் விதமாக கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. வசுந்த்ராவின் இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான கானாப்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அரசியல்வாதிகளும், ஆயிரக் கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x