Last Updated : 15 Feb, 2017 09:09 AM

 

Published : 15 Feb 2017 09:09 AM
Last Updated : 15 Feb 2017 09:09 AM

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு ஒரே கொள்கை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தவர்களை டிஸ்சார்ஜ் செய்யும் விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய கொள்கையை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, ஜம்மு காஷ்மீர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் எண்ணற்ற நோயாளிகள் உள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு ஏராளமானோர் குணமடைந்த போதிலும், மருத்து வமனை நிர்வாகம் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே வைத்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஓய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகளில் மட்டும் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள் டிஸ்சார்ஜ் செய்யும் விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதரியான தேசிய கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அத்துடன் இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x