Last Updated : 20 Jan, 2016 08:58 AM

 

Published : 20 Jan 2016 08:58 AM
Last Updated : 20 Jan 2016 08:58 AM

முதல்வரின் கட்டுப்பாட்டில் பிஹார் மாநில அரசு இல்லை: பாஸ்வான் கட்சி குற்றச்சாட்டு

பிஹார் மாநில அரசு, முதல்வர் நிதிஷ்குமாரின் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கு காட்டாட்சி மீண்டும் திரும்பியிருக்கிறது என்ற கருத்துகள் உண்மைதான் என லோக்ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் இதுதொடர்பாகக் கூறியதாவது:

பிஹாரில் ஒருநாள் விட்டு ஒரு நாள் யாராவது கொலைசெய்யப் படுகின்றனர். ஆட்சியைக் கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி யைக் கோரலாமா என்பது குறித்து எங்கள் கட்சி கூட்டத்தில் விவாதித் தோம். இந்த சூழ்நிலை நல்ல நிலைக்குத் திரும்பும் என எங்க ளால் காத்திருக்க முடியாது.

மூன்று முறை முதல்வராக இருந்தவர் என்பதால் பெற்ற நீண்ட அனுபவம் காரணமாக சந்தேகத்தின் பலனை நிதிஷ்குமாருக்கு அளிக்க முடியாது.

அரசு, நிதிஷ் குமாரின் கட்டுப்பாட் டில் இல்லை என்பதை இந்தக் கொலைகள் காட்டுகின்றன. அவர்தான் முதல்வர். இதுபோன்ற கொலைகளைத் தடுப்பதிலிருந்து அவரை எது கட்டுப்படுத்துகிறது என்பது தெரியவில்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ்தான் பிஹார் கூட்டணி அரசை நேரடியாக நடத்தி வருகிறார்.

பிஹாரில் குற்றச்செயல்கள் அதி கரித்துக்கொண்டே வருகின்றன. இவ்வளவு விரைவில் நிலைமை மோசமடையும் என எதிர்பார்க்க வில்லை. காட்டாட்சி மீண்டும் திரும்புகிறது என்ற எங்களின் கூற்று உண்மையாகி வருகிறது.

மோடியின் பாகிஸ்தான் பயணத் துக்காக நிதிஷ் அவரைப் பாராட்டி னார், ஆனால், லாலுவோ விமர் சித்தார். எனவே, இருவரும் ஒரே தளத்தில் இல்லை. இந்த கூட்டணி ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. லாலுவும், நிதிஷும் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்களுடையது இயல்பான கூட்டணி அல்ல. பாஜக, லோக் ஜனசக்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x