Last Updated : 07 Jul, 2015 10:29 AM

 

Published : 07 Jul 2015 10:29 AM
Last Updated : 07 Jul 2015 10:29 AM

‘வியாபம்’ ஊழல் விவகாரம்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை

‘வியாபம்’ ஊழலில் ஆளுநரை நீக்கக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘வியாபம்’ முறைகேடு பிரச்சினை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்நிலையில் முறை கேட்டில் குற்றம்சாட்டப்பட் டுள்ள மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவை நீக்கம் செய்வது குறித்த மனுவை விசா ரணைக்கு ஏற்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம் (எம்பிபிஇபி), மத்தியப் பிரதேசத் தில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாகச் செயல்படுகிறது. மருத்துவத் துறை நியமனங்களுக் கான தேர்வுகளையும் இது நடத்துகிறது. ‘வியாபம்’ எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

இம்முறைகேட்டில் தொடர் புடையதாக சந்தேகிக்கப்படும் ஆளுநர் ராம் நரேஷ் யாதவை பதவியில் இருந்து நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இம்மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. வியாபம் தொடர்புடைய இதர மனுக்களுடன் சேர்த்து வரும் 9-ம் தேதி விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

வியாபம் முறைகேட்டில் தொடர் புடைய இளம்பெண் ஒருவர் ரயில்வே பாதை அருகே மர்ம மான முறையில் கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்து கிடந்தார். அப்பெண்ணின் பெற்றோரிடம் 3 நாட்களுக்கு முன் பேட்டியெடுத் துக் கொண்டிருக்கும்போதே நிருபர் அக் ஷய் சிங் திடீரென வாயில் நுரைதள்ளி இறந்தார்.

இந்நிலையில் அவரின் உடல் உறுப்புகளை வேறு மாநிலத்தில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அந்நிருபரின் சகோதரி கோரிக்கை விடுத்தார். இதை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஏற்றுக்கொண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தடய வியல் சோதனைக்கு பரிந்துரைத் துள்ளார்.

முதல்வர் பதவி விலக கோரிக்கை

வியாபம் மர்ம மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண் டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு மறுப்பு

வியாபம் விசாரணை தொடர் பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தை முதல்வர் சிவராஜ் சவுகான் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பிறகு ராஜ்நாத் சிங் கூறியதாவது: சிறப்பு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தனிப்படை மத்தியப் பிரதேச அரசின் கீழ் செயல்படவில்லை. உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. இவ்விவகாரம் அரசியலாக்கப்படக்கூடாது.

உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ சிறப்பு தனிப்படை இந்த விசாரணையை உரிய முறையில் கையாளவில்லை எனக் கருதினால், சிபிஐ விசாரணை தொடங்கப்படும். சிபிஐ விசாரணை கோரும் மனு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டிலுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

காவல் துறை பெண் அதிகாரி மர்ம மரணம்

அனாமிகா சிகர்வார் (25) என்ற பெண், வியாபம் தேர்வு எழுதி காவல்துறை உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்றார். அதற்கான பயிற்சியை சாகர் மாவட்டத்திலுள்ள காவல்துறை பயிற்சி அகாடமியில் பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் பயிற்சி அகாடமி அருகிலுள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறை கண்காணிப்பாளர் கவுதம் சோலங்கி கூறும்போது, “அவரது மரணம் தற்கொலையாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். அவருக்கும் வியாபம் முறைகேட்டுக்கும் தொடர்பு இல்லை. அவர் முறைகேடாக தேர்ச்சி பெற்றவர் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x