Last Updated : 10 Feb, 2017 10:18 AM

 

Published : 10 Feb 2017 10:18 AM
Last Updated : 10 Feb 2017 10:18 AM

உ.பி.யில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சமாஜ் வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணி யில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 403 தொகுதி களில் காங்கிரஸுக்கு 105 ஒதுக் கப்பட்டன. மீதம் உள்ள தொகுதி களில் ஆளும் சமாஜ்வாதி போட்டியிட முடிவு செய்யப் பட்டது. இதன் பிறகு காங்கிரஸ் சார்பில் அடுத்தடுத்து வெளியிடப் பட்ட 5 வேட்பாளர்கள் பட்டிய லில் மொத்தம் 106 பேர் இடம் பெற்றிருந்தனர்.

மேலும் அமேதி மாவட்டம் சலோன் தொகுதியில் ஒரு வேட் பாளரை நிறுத்த காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சுமார் 12 தொகுதிகளில் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களும் வாபஸ் பெற மறுத்து விட்டனர். இவர்களில் 8 பேர் ரேபரேலி மற்றும் அமேதி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் இந்த தொகுதிகளில் இரு கட்சிகளுக்கிடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி தனிப்பட்ட முறையில் அகிலேஷிடம் பேசி, இவ்விரு மாவட்டங்களில் 10 தொகுதிகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி யின் உ.பி. நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “கூட்டணி முடிவில் சற்று தாமதம் ஏற்பட்டதே இந்த குழப்பத்துக்குக் காரணம். பல முறை எச்சரித்தும் அந்த வேட்பாளர்கள் வாபஸ் வாங்க மறுத்து விட்டனர். எனவே, வேறு வழியின்றி இவர்களது போட்டியை நட்பு ரீதியில் எடுத்துக்கொள்ள இரு கட்சிகளும் சம்மதித்து விட்டன. எனினும், இந்த குழப்பம் காரணமாக அந்த தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

இதனிடையே, சமாஜ்வாதிக்கு தனது கட்சியின் அதிருப்தியாளர் களாலும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இத்துடன், பாரதிய ஜனதா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் களத்தில் இருப்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிப்ரவரி 11-ல் முதல் மார்ச் 8 வரை ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் மார்ச் 11-ல் வெளியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x