Published : 19 Jun 2017 09:11 AM
Last Updated : 19 Jun 2017 09:11 AM

அத்வானிக்கு ஆதரவாக சுவரொட்டி

பாஜக மூத்த தலைவர்அத்வானியை குடியரசுத் தலைவராக நியமிக்க ஆதரவு தெரிவித்து டெல்லியின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் அத்வானிதான் இந்தப் பதவிக்கு பொருத்தமானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியிலும் ஒட்டப்பட்டுள்ளது. எனினும், அந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியை குர்ஜார் சமாஜ் ஒருங்கிணைப்பாளரான அசோக் தன்வார் என்பவர் வெளியிட் டுள்ளார். அத்வானிக்கு பாஜக எம்.பி. சத்ருஹன் சின்ஹாவும் சமீபத்தில் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x