Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

தேர்தலின்போதுதான் காங்கிரஸுக்கு ஏழைகள் நினைவு வரும்: மோடி குற்றச்சாட்டு

ஏழைகளைப் பற்றிய அக்கறை காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலின் போது மட்டுமே வரும். ஏழைகளை வாக்கு வங்கிக்காக மட்டும் காங் கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது என உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக மோடி பேசியதாவது:

மோடியால் உத்தரப்பிர தேசத்தை குஜராத் போல் மாற்ற முடியாது என சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் கூறியுள் ளார். குஜராத்தைப்போல மாற்று வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா முலாயம்? ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீதியிலும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவது. உங்களால் அது முடியாது. அதற்கு தெளிவான முடிவெடுக்கும் திறன் வேண்டும்.

இந்த தேசம் ஏழை தேசமல்ல. வளம் மிக்க இத் தேசத்தின் மக்கள் அரசியல் காரணங்களுக்காக ஏழைகளாகவே வைக்கப்பட்டிருக் கின்றனர். கடந்த 60 ஆண்டுகால மாக வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. ஏழைகளின் வாக்கு காங்கிரஸுக் குக் கிடைத்தும் ஏன் இவ்வளவு காலமாக வறுமை அதிகரித்தே வந்திருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்து விட்டது. ஏழைகளுக்கு எதிரான மனப் பாங்கை உடைய காங்கிரஸ் மக்களை ஏழைகளாகவே வைத் திருப்பதன் மூலம் வாக்கு வங்கி யைத் தக்கவைத்திருக்கிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், “ரத்தத்தைக் கொடுங்கள் விடு தலையைத் தருகிறேன்” என்றார். நீங்கள் எனக்கு 60 மாதங்களைக் கொடுங்கள். நான் உங்களின் வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக வும், அமைதியானதாகவும் ஆக்கு வேன். இதை நான் உறுதியாகக் கூறுகிறேன் என்றார் மோடி.

தன் பேச்சில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x