Last Updated : 14 Mar, 2017 01:31 PM

 

Published : 14 Mar 2017 01:31 PM
Last Updated : 14 Mar 2017 01:31 PM

தி வைரல் ஃபீவர் மீது குவியும் பாலியல் வன்முறை புகார்கள்

தி வைரல் ஃபீவர் என்ற ஆன்லைன் ஊடகத்தின் தலைவர் அருனாப் குமார் மீது மேலும் சில பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீடியம்.காம் என்ற இணையதளத்தில் வெளியான பிளாக் பதிவில் தி வைரல் ஃபீவர் ஆன் லைன் ஊடகத்தின் தலைவர் அருனாப் குமார், தனது பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானது.

அதன் சூடு அடங்குவதற்குள் தி குவிண்ட் என்ற இணையதளம் தி வைரல் ஃபீவர் ஊடகத்தின் தலைவர் அருனாப் குமார் மீது மேலும் சில பாலியல் புகார்களை தொகுத்தளித்துள்ளது.

ஆனால் தி வைரல் ஃபீவர் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்கு ஆதரவாகவே கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தி குவிண்ட் இணையதளம், தி வைரல் ஃபீவர் தளத்தின் முன்னாள் ஃப்ரீலான்சரும், அருனாப் குமாரின் கல்லூரி கால சக மாணவருமான ஒருவரை மேற்கோள் காட்டி குறிபிட்ட போது, அருனாப், பாலியல் ரீதியாக பெண் ஊழியர்களை துன்புறுத்தினார் என்று கூறியதாக தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தி வைரல் ஃபீவர் நிர்வாகம் அளித்துள்ள பதிலும் ஆன்லைனில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதாவது, ‘எங்களைப் பற்றி இப்படி அவதூறாக எழுதியவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க அனைத்து விதமான உத்திகளையும் கடைபிடித்து வருகிறோம், அவரை இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தியதற்காக நீதியின் முன் நிறுத்துவோம்.

தி வைரல் ஃபீவர் ஆன்லைன் ஊடகத்தின் சில ஊழியர்கள் பிளாக்கில் எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றது என்று ஒதுக்கித் தள்ளினர்.

நிதிபிஷ்ட் என்பவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “தி வைரல் ஃபீவர் ஆன்லைன் ஊடகம் பெண்கள் பணியாற்றுவதற்கு சிறந்த இடம் என்றே நான் கருதுகிறேன். பொதுவாக நான் மரியாதைக்குரிய விதத்திலேயே நடத்தப்படுகிறேன். இந்த 5 ஆண்டுகாலத்தில் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பிய அந்தப் பெண் ஊழியர் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை” என்றார்.

மேலும் சிலர் இந்தப் புகார்கள் குறித்து தி வைரல் ஃபீவர் விசாரிக்க மறுப்பதை கடுமையாக விமர்சித்தனர். திரைப்பட இயக்குநர் ஹன்சலா மேத்தா, “பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியாகவோ அல்லது வேறு முறையிலோ தொல்லைகள் கொடுக்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

வெகுஜன நகைச்சுவை நடிகர் அதிதி மிட்டல், ஏன் இது பற்றி பலரும் பேசாமல் தவிர்க்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே சமயத்தில் அனைவருமா பொய் புகார் கூறுவார்கள்? என்று கேட்கிறார் அதிதி மிட்டல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x