Published : 07 Mar 2017 08:57 AM
Last Updated : 07 Mar 2017 08:57 AM

காயத்ரி வீணையில் 5 மணி நேரத்தில் 67 பாடல்கள் இசைத்து வைக்கம் விஜயலட்சுமி புதிய சாதனை

‘காயத்ரி வீணை’யில் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 67 பாடல்களை இசைத்து பிரபல இசைக் கலைஞர் வைக்கம் விஜயலட்சுமி புதிய சாதனை படைத்துள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளம் அருகில் உள்ள வைக்கம் பகுதியில் பிறந்த வர் விஜயலட்சுமி. பிறவியிலேயே பார்வை குறைபாட்டுடன் இருந் தாலும், இசையில் அவருக்கு இருந்த திறமை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஒற்றை கம்பி கொண்ட ‘காயத்ரி வீணை’யில் தொடர்ந்து 5 மணி நேரம் 67 பாடல்களை இசைத்து அசத்தினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.

இதற்கு முன்னர் ஒரே நிகழ்ச்சியில் தொடர்ந்து 51 பாடல்கள் வீணையில் இசைத்ததே இவருடைய சாதனை யாக இருந்தது. தன்னுடைய சாத னையை இப்போது அவரே முறியடித் துள்ளார். சமீபத்தில் இவருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் இடையே நடக்கவிருந்த திருமணம் தடைபட்டது. திருமணத்துக்குப் பிறகு இசை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. கல்லூரியில் இசை ஆசிரியராக சேர வேண்டும் என்று சந்தோஷ் விதித்த நிபந்தனையை ஏற்க வைக்கம் விஜயலட்சுமி மறுத்துவிட்டார். இசையை உயிராகக் கருதும் விஜயலட்சுமி தற்போது கேரளாவில் பெண்கள் பலருக்கு உந்துசக்தியாக விளங்குகிறார்.

இதுகுறித்தும் வைக்கம் விஜய லட்சுமி கூறும்போது, ‘‘இசையா திரு மணமா என்று வந்தபோது, இசையை தேர்ந்தெடுத்ததில் நான் வருத்தப்பட வில்லை’’ என்றார். இப்போது அவர் புதிய சாதனை படைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர்கள், கலைஞர்கள் முன்னிலையில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு, ‘யுனிவர்சல் ரெக்கார்ட் போரம்’ விருது வழங்கப்பட்டது.

அத்துடன், வைக்கம் விஜயலட்சுமியின் புதிய சாதனை குறித்த ஆதாரங்களை கின்னர் நிறுவனத்துக்கு அளிப்போம். ஏற்கெனவே 51 பாடல்களை ஒரே நேரத்தில் வீணையில் இசைத்ததால், 52 பாடல்களை இசைக்கவே திட்டமிட்டிருந்தார் வைக்கம் விஜயலட்சுமி. ஆனால், தொடர்ந்து 67 பாடல்களைஇசைத்த பிறகே நிறுத்தினார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

‘‘என்னுடைய கனவு நிஜமாகி உள்ளது. இந்த சாதனையை என்னுடைய குருக்கள் மற்றும் பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். என்னுடைய மானசீக குரு கே.ஜே.யேசுதாஸ்தான்’’ என்று வைக்கம் விஜயலட்சுமி உருக்கமாக தெரிவித்தார். இதுவரை 750-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள விஜயலட்சுமி, ‘‘இந்த உலகத்தை என் பெற்றோர் வழியாகப் பார்க்கிறேன். அவர்கள் எனக்காக நிறைய தியாகங்களை செய்துள்ளனர். இசையை என் வாழ்க்கையாக்கி தந்தனர்’’ என்கிறார்.

இவருடைய ரசிகர்களில் ஒருவர் ‘காயத்ரு தம்புரு’ என்ற இசைக் கருவியை பரிசாக அளித்தார். அதை அவருடைய தந்தை ஒற்றை கம்பி வீணையாக மாற்றி தந்தார். அதில்தான் வாசிக்க தொடங்கினார். பிரபல வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன், வைக்கம் விஜய லட்சுமியின் வாசிப்பை கேட்டுள்ளார். அதன்பிறகுதான், விஜயலட்சுமியின் வீணைக்கு, ‘காயத்ரி வீணை’ என்று பெயரிட்டுள்ளார்.

வீணை இசை நிகழ்ச்சிகள் மட்டுமன்றி மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் 40-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. ‘செல்லூலாய்ட்’ என்ற மலையாள படத்தில் பிரபல பின்னணி பாடகர் ஜி.ஸ்ரீராமுடன் சேர்ந்து பாடல் பாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x