Last Updated : 09 Mar, 2016 09:01 AM

 

Published : 09 Mar 2016 09:01 AM
Last Updated : 09 Mar 2016 09:01 AM

யமுனையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தும் கலாச்சார திருவிழாவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு

குடியரசுத் தலைவர் புறக்கணிப்பு; பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு மற்றும் சர்ச்சையைத் தொடர்ந்து யமுனை நதிக்கரையில் நடைபெறும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் கலாச் சார விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார். நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அளித்துள்ளது.

டெல்லியில் யமுனை நதிக்கரை யில், வாழும் கலை அமைப்பு சார்பில் வரும் 11-ம் தேதி உலக கலாச்சார விழா தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும், நிறைவு நாளில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

வெளிநாட்டவர் உட்பட சுமார் 35 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்காக யமுனை நதியில் மிதக்கும் தற்காலிக பாலங் களை ராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். இதற்காக ராணுவத் துக்கு வாழும் கலை அமைப்பு கட்டணம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் மற்றும் தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிகழ்ச்சிக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யமுனையில் உள்ள அசுத்த நீரை சுத்திகரிப்பதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நொதிப்பான் களை (என்ஸைம்) 17 இடங்களில் நீரில் மிதக்கவிட முடிவு செய்துள்ள னர். இவை, அறிவியல் ரீதியாக பரிசோதிக்கப்படாதவை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கு அமைக்கப்படும் மேடைகள், தடுப்புகளால் நதிச் சமவெளி பாதிக்கப்படும் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகளை வாழும் கலை அமைப்பு மறுத்துள்ளது. “நதிச் சமவெளிக்கு எவ்வித நிரந்தர சேதமும் ஏற்படாது. மரம், மண், துணி என சுற்றுச்சூழலுக்கு உகந்த வற்றை மட்டுமே பயன்படுத்தி தற்காலிக கட்டுமானங்களை மட்டுமே ஏற்படுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி அரசு, டெல்லி மேம்பாட்டு ஆணையம், வாழும் கலை அமைப்பு ஆகிய வற்றுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேற்று இதுதொடர்பான விசாரணையின் போது, ஸ்வதந்தர் குமார் தலைமை யிலான அமர்வு, “நீர் சமவெளிப் பகுதியில் தற்காலிக கட்டுமானம் அமைக்க ஏன் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் தேவையில்லை” என்பதற்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு உத்தர விட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.

பிரணாப் நிராகரிப்பு

இதனிடையே, “தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்க்க இந் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்க மாட்டார்” என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிசங்கர் விளக்கம்

இதுதொடர்பாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்பகுதியில் எங்கள் பணி நிறை வடைந்தால், அழகான பல்லுயிர்ச் சூழல் பூங்காவாக இந்த இடம் மாறி விடும். 2010-ம் ஆண்டு முதல் எங்களின் தன்னார்வலர்கள் இந்த நதியைச் சுத்தம் செய்து வருகின்ற னர். 512 டன் அசுத்தம், குப்பைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. யமுனையை பாதுகாக்கவே விரும்புகிறோம். இந்த நிகழ்ச்சிக் காக ஒரு மரம் கூட வெட்டப்பட வில்லை.

நிகழ்ச்சியால் யமுனை அசுத்த மடையாது. மீதேன் வெளியேற்றத் தைத் தடுக்க என்ஸைம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தவுள்ளோம். இது நிரூபிக்கப்பட்ட தொழில் நுட்பம். ஆனால், எதிர்ப்பவர்கள் இந்த என்ஸைம்கள் பற்றி அறியா தவர்களாக உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராணுவ தலையீடு ஏன்

இந்த நிகழ்ச்சிக்காக பாலம் அமைத்துக் கொடுக்க முதலில் ராணுவம் மறுத்து விட்டது. கூட்ட நெரிசலால் விபத்து ஏற்படும் என டெல்லி காவல் துறை அச்சம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பாது காப்புத் துறை ஒப்புக் கொண் டுள்ளது.

மத்திய பிரதேச கும்ப மேளாவுக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக பாலங்கள், இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நிகழ்ச்சி முடிந்த பிறகு, உஜ்ஜைனி கொண்டு செல்லப்படும். மக்களின் பாது காப்பை கருத்தில் கொண்டே, ராணுவம் உதவிக்கு அனுப்பப்பட் டுள்ளது எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x