Last Updated : 20 Jan, 2014 12:00 AM

 

Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

சுனந்தா வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்: மத்திய உள்துறை அமைச்சருக்கு சசி தரூர் கடிதம்

தனது மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சர் சசிதரூர் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுக்கடங்காத கற்பனை செய்திகளால் தாம் திகிலடைந்துள்ளதாகவும் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் முதல் நாளில் இருந்தே விசாரணையை தொடங்கிவிட்ட டெல்லி போலீஸார் கடந்த சனிக்கிழமை சுனந்தா மற்றும் சசிதரூரின் வீட்டுப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். மறுநாள் சுனந்தாவின் நண்பர்கள் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர்.

சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், அவரது மரணம் இயற்கையானது அல்ல எனக் கூறியுள்ளனர்.

சம்பவத்தன்று சுனந்தா மிகுந்த மனஉளைச்சலில் இருந்திருக்கி றார்.

இதனால், மருத்துவர்கள் அளித்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிரிழப்பு நேர்ந்திருக்கலாம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

சசிதரூருக்கும் பாகிஸ்தானிய பத்திரிகையாளரான மெஹர் தரார் என்பவருக்கும் இடையே நடைபெற்ற ட்விட்டர் கருத்துப் பரிமாற்றங்கள், மின்னஞ்சல்களை படித்த சுனந்தா பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். சசிதரூரின் இந்த திடீர் “நட்பே” சுனந்தா மரணத்துக்கு முக்கியக் காரணம் எனக் கருதப் படுகிறது.

கோட்டாட்சியரிடம் சசி தரூர் வாக்குமூலம்:

சசி தரூர், சுனந்தா புஷ்கர் திருமணம் நடந்து இன்னும் 7 ஆண்டுகள் நிறைவடையவில்லை. இதனால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லி கோட்டாட்சியர் அமைச்சர் சசி தரூரிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த சசி தரூர், பல்வேறு முக்கிய தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x