Published : 15 Feb 2017 10:52 AM
Last Updated : 15 Feb 2017 10:52 AM

உத்தரப் பிரதேசத்தில் 2-வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

தேசிய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது கட் வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாவது கட்டமாக உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 67 சட்டப்பேரவை தொகுதிகளிலும், உத்தராகண்டில் 69 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் முக்கிய தேர்தல் என்பதால், பிரதமர் நரேந்திர மோடிக்கு இது ஒரு சோதனையாக அமையும் என்று கூறப்படுகிறது.

இணையம் மூலம் வாக்களிக்க வசதி

தங்கள் தொகுதிக்கு வெளியே பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், இணையதளம் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இப்போது இந்த வசதியை சில தொகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மகளிர் வாக்குப்பதிவு மையங்கள்

தேர்தல் நிர்வாக நடைமுறைகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், சில இடங்களில் அனைத்து மகளிர் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் பெண் அலுவலர்கள் மட்டுமே இருப்பர். மேலும் மாற்றுத் திறனாளிக்கு தேவையான வசதிகளும் வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்படும்.

மறைப்புகளின் உயரம் அதிகரிப்பு

முந்தைய தேர்தலின்போது பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், இந்த முறை வாக்களிக்கும் இடத்தில் உள்ள மறைப்புகளின் உயரம் 30 அங்குலம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் உடலின் மேற்பகுதி மறைக்கப்படுவதுடன் அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என மற்றவர்கள் பார்க்க முடியாது.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x