Published : 04 Sep 2018 08:27 AM
Last Updated : 04 Sep 2018 08:27 AM

கடந்த ஓராண்டில் நக்சல்களுக்கு உதவி வந்த 500 இடதுசாரி ஆர்வலர்கள் கைது: சிஆர்பிஎப் டிஜிபி ஆர்.ஆர்.பட்நாகர் தகவல்

நக்சல்களுக்கு உதவி வந்ததாக கடந்த ஓராண்டில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இடதுசாரி ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிஆர்பிஎப் துணை ராணுவ டிஜிபி ஆர்.ஆர்.பட்நாகர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தி நிறுவனத் துக்கு அவர் அளித்த பேட்டி:

நாட்டில் பல்வேறு மாநிலங் களில் வனப்பகுதிகளில் பதுங்கி யிருக்கும் நக்சல்களை தேடுதல் வேட்டையின் மூலம் கைது செய் வது, அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிப்பது என பல பணி களில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஓராண்டில் நக்சல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இடதுசாரி ஆர்வலர்கள் 500 பேரை சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்துள்ளோம். மாநில போலீஸா ருடன் இணைந்து நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம். அதைப் போலவே நக்சல்களுக்கு ஆதரவாக செயல்படுவோரையும், அவர்களுக்கு உதவுவோரையும் கைது செய்து வருகிறோம்.

நக்சல்கள் தேடுதல் வேட்டை யில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிஆர்பிஎப் போலீஸார் ஈடுபட்டுள் ளனர். அவர்களுக்குத் தேவை யான நவீன ஆயுதங்கள் வழங் கப்பட்டுள்ளன. கிராமங்களில் நக்சல்களுக்கு உதவுவோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.

ஜன் மில்ட்டியா அமைப்பு உள் ளிட்ட சில அமைப்புகளைச் சேர்ந் தவர்கள் நக்சல்களுக்கு தகவல் களைக் கொடுத்து உதவி வருகின் றனர். அவர்களைக் கண்காணித்து கைது செய்து வருகிறோம்.

கடந்த ஓராண்டில் 160 நக்சல் களை ஆயுதங்களைக் கீழே போட்டு சரண் அடைந்துள்ளனர். நக்சல் களை ஒடுக்குவதற்காக கோப்ரா என்ற புதிய பிரிவை சிஆர்பிஎப் படையில் உருவாக்கியுள்ளோம். இந்த கோப்ரா படையினர் வனப் பகுதிகளில் நுழைந்து நக்சல் களுடன் போரிடக்கூடிய திறமை படைத்தவர்கள் ஆவர்.

இளம் வீரர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்கவும், தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக சிஆர்பிஎப் படையில் புதிதாக 5 ஆயிரம் இளம் வீரர்களைச் சேர்த்துள்ளோம்.சிஆர்பிஎப் படை யின் பல்வேறு நடவடிக்கைகளால் நக்சல் நடமாட்டம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x