Published : 18 Sep 2018 05:29 PM
Last Updated : 18 Sep 2018 05:29 PM

அஜய் மக்கான் பதவி விலகல்? - காங்கிரஸ் மறுப்பு

டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் பதவி விலகவில்லை, உடல்நிலை கருதி மருத்துவ விடுப்பில் செல்கிறார் என அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான். இரண்டுமுறை எம்.பி.யாக தேர்வான அவர், கடந்த 2012-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலராக பதவி வகித்து வந்த அவர், 2015-ம் ஆண்டு டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர், திடீரென பதவி விலகுவதாக கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனது உடல்நிலையை கருதி பதவி விலகுவதாக கூறியுள்ளார். அவரது ராஜினாமாவை ராகுல் காந்தி ஏற்கவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில் ‘‘உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு செல்வதால் பதவி விலகுவதாக அஜய் மக்கான் கூறியுள்ளார். அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கவில்லை.

அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து கட்சி தலைமை இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர் மருத்துவ விடுப்பில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்’’ எனக் கூறியுள்ளார்.

இதனிடையே டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை விரும்புவதாகவும், அஜய் மக்கான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x