Published : 19 Sep 2018 02:09 PM
Last Updated : 19 Sep 2018 02:09 PM

பசு மாட்டுச் சாணம், கோமியத்தில் சோப், ஷாம்பு, மருந்து: ஆர்எஸ்எஸ் பொருட்கள் அமேசானில் விற்பனை

 மாட்டுச் சாணம், கோமியத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட குளியல் சோப், ஷாம்பு, முகம் கழுவும் கிரீம், போன்றவற்றை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மருந்து நிறுவனம் தயாரித்து அமேசான் மூலம் விற்பனை செய்யவுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் மதுராவில் தீன தயாள் தாம் என்ற மருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த மருந்தகம் சார்பில் பசுமாட்டின் சாணம், கோமியத்தின் மூலம்செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்குவர உள்ளது.

இது குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் அருண் குமார் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘பசுமாட்டின் சாணம், கோமியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள், குளியல் சோப், ஷாம்பு, முகம் சுத்தம் கழுவும் பவுடர் உள்ளிட்ட 30 வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த மாதத்தில் இருந்து அமேசான் ஆன்-லைன் நிறுவனம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. இதுதவிர பிரதமர் மோடி அணியும் குர்தா போன்று ஆடைகள், யோகி ஆதித்யநாத் அணியும் ஜிப்பா போன்று ஆடைகள் தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம்.

இதன் மூலம் உள்நாட்டு மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்கும், ஆன்லைனில் விற்பனைக்கு வரும் போது தேவை அதிகரித்து, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். முதல்கட்டமாக ஒவ்வொரு மாதமும் மருந்துப்பொருட்களை ரூ. ஒருலட்சத்துக்கும், ஆடைகளை ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். எனத் தெரிவித்தார்.

தீன தயாள் தயாம் மருந்தகத்தின் செயலாளர் மணிஷ் குப்தா கூறுகையில், ‘‘பசுவின் கோமியும், சாணத்தை மூலப்பொருட்களாக வைத்து பல்வேறு மருந்துப்பொருட்களை தயாரித்துள்ளோம். நீரழிவு நோயாளிகளுக்கான மருந்து, உடல்பருமனைக் குறைக்கும் மருந்துகள், சோப்பு, ஷாம்பு, பற்பசை, முகம்சுத்தம் செய்யும் பவுடர், ஊதுபத்தி போன்றவை தயாரித்துள்ளோம்

இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பசுமாட்டின் கோமியம், சாணத்தைச் சேகரித்து வருகிறோம். எங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமாக 90 பசுக்கள் இருக்கின்றன. அதில் 10 வேலையாட்கள் மூலம் சாணம், கோமியம் சேகரிக்கப்படுகிறது. ஆன்-லைன் மூலம் பசுகோமியத்தின் பொருட்களை விற்பனை செய்யும் போது அதிகமான ஆர்டர் கிடைக்கும் என்று நம்புகிறோம். இங்குத் தயாரிக்கப்படும் பொருட்களின் மிகக்குறைந்த பட்சமாக 10 ரூபாய் முதல் ரூ.230 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மோடி, யோகி குர்தாக்கள் ஒவ்வொன்றும் ரூ.220 விலையில் விற்பனை செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x