Last Updated : 12 Jun, 2019 09:47 AM

 

Published : 12 Jun 2019 09:47 AM
Last Updated : 12 Jun 2019 09:47 AM

தேசிய வடிவமைப்பு-ஆராய்ச்சி மன்ற இயக்குநராக விஞ்ஞானி வி.டில்லி பாபு நியமனம்

தேசிய வடிவமைப்பு-ஆராய்ச்சி மன்ற இயக்குநராக விஞ்ஞானி வி.டில்லி பாபு நியமிக்கப் பட்டுள்ளார்.

இந்திய பொறியாளர்கள் நிறு வனத்தின் (IIE) கீழ் தேசிய வடி வமைப்பு - ஆராய்ச்சி மன்றம் (NDRF) கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அமைப்பு நாட்டின் முன்னேற்றம் சார்ந்த பல் துறை பொறியியல் ஆராய்ச்சிப் பணிகளை, கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், ஆய்வுக்கூடங் களை ஒருங்கிணைத்து தொழில் நுட்பச் சேவையை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற சந்திரயான் திட்ட இயக்கு நரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார். இவர் நேற்று தேசிய வடிவமைப்பு - ஆராய்ச்சி மன்ற இயக்குநராக ராணுவ ஆராய்ச்சி - மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானி வி.டில்லிபாபுவை நியமித்து உத்தர விட்டார். இதையடுத்து பெங்களூரு வில் உள்ள அதன் அலுவலகத் தில் மயில்சாமி அண்ணாதுரை முன் னிலையில் முன்னாள் இயக்குநர் டாக்டர் கே.ராமசந்திராவிடம் இருந்து வி.டில்லிபாபு பொறுப்பு களை ஏற்றுக்கொண்டார்.

சென்னையை சேர்ந்த வி.டில்லி பாபு போர் விமான இன்ஜின் ஆராய்ச்சியாளராக பெங்களூரு வில் பணியாற்றி வருகிறார். வேலூர் பெரியார் பொறியியல் கல்லூரி யில் பட்டப் படிப்பு முடித்த இவர், புனேவிலுள்ள ராணுவ உயர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தில் முதுநிலை பட்டமும், திருச்சி யிலுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இலக்கியம், விஞ் ஞான தொழில்நுட்பம் தொடர்பாக 6 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரை கள் எழுதிவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x