Last Updated : 27 Jun, 2019 12:00 AM

 

Published : 27 Jun 2019 12:00 AM
Last Updated : 27 Jun 2019 12:00 AM

தண்ணீர் பிரச்சினையை ஆராய 255 அதிகாரிகள் நியமனம்

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையை சரிசெய்யவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் ஜல் சக்தி அபியான் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக மத்திய அரசைச் சேர்ந்த 255 மூத்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜல் சக்தி அபியான் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அதிகாரிகள் அனைவரும் கூடுதல் செயலர்கள், இணைச் செயலர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள்.

இவர்கள் மத்திய அரசு அதிகாரிகள், இயக்குநர், துணைச் செயலர்கள் பதவி அந்தஸ்தில் உள்ளவர்கள், நீர் ஆதாரத்துறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மாநில, மாவட்டக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவர்.

இந்த 255 அதிகாரிகளும், தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரிகளாக இருப்பார்கள். அவர்களுடன் இணைந்து குடிநீர் பிரச்சினை, தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க, தீர்வுகளை அளிப்பார்கள். இந்தத் திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை குறிப்பிட்ட நகரங்களில் அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 255 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை இருப்பதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடிநீர், தண்ணீர் பிரச்சினைகள் தொடர்பாக ஜல் சக்தி துறையின் இணையதளத்தில் தங்களது அறிக்கைகளை பதிவு செய்வார்கள் என்று தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x