Published : 26 Mar 2018 09:48 AM
Last Updated : 26 Mar 2018 09:48 AM

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள் பறிமுதல் 300% அதிகரிப்பு என்பிசி ஆய்வறிக்கையில் தகவல்

.நாட்டில் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் போதைப் பொருட்களை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அடிக்கடி பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் (என்சிபி) ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஓப்பியம், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

2017-ம் ஆண்டில் போதைப் பொருள் பறிமுதல் மிக அதிகமான அளவில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் போதைப் பொருள் பறிமுதலானது 300 சதவீதம் அதிகரித்துள்ளது.

2017-ல் 2,551 கிலோ ஓப்பியம், 2,146 கிலோ ஹெராயின், 3,52,379 கிலோ கஞ்சா, 3,218 கிலோ ஹாஷிஷ் போதைப் பொருள், 69 கிலோ கோகைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளன.

2017-ல் மட்டும் 3.60 லட்சம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செயய்ப்பட்டது. 2016-ல் 3.01 லட்சம் கிலோ, 2015-ல் 1 லட்சம் கிலோ, 2014-ல் 1.1 லட்சம் கிலோ, 2013-ல் ஒரு லட்சம் கிலோவுக்கும் மேல் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

2017-ல் பஞ்சாபில் அதிக அளவாக 505.86 கிலோ ஓப்பியம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோல ராஜஸ்தானில் 426.95 கிலோ ஓப்பியம் பறிமுதல் செய்யப்பட்து. குஜராத்தில் அதிக அளவாக 1,107 கிலோ ஹெராயினும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 406 கிலோ எடையுள்ள ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் 78,767 கிலோ எடையுள்ள கஞ்சா 2017-ல் பறிமுதல் செய்யப்பட்டது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x