Published : 21 May 2019 03:49 PM
Last Updated : 21 May 2019 03:49 PM

கடினமாக உழைத்தீர்கள்... ராகுல், பிரியங்காவுக்கு சபாஷ் சொன்ன சிவசேனா

ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு சிவசேனா பாராட்டு தெரிவித்திருக்கிறது. சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் இந்த பாராட்டு வெளியாகியிருக்கிறது.

"இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடினமாக உழைத்தனர். நிச்சயமாக காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும். 2014-ல் ராகுல் காந்தியால் எதிர்க்கட்சித் தலைவராவதற்குத் தேவையான இடங்களைப் பெற இயலவில்லை. ஆனால், இந்த முறை காங்கிரஸுக்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கிடைத்துவிடுவார். இதுவே ராகுல் காந்திக்கு  வெற்றிதான்" இவ்வாறு சாம்னா இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மோடி..

மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையும் என்பதை கருத்துக் கணிப்புகள் தெளிவாக உணர்த்துகின்றன.

மக்களவைத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிவுற்றது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவித்துள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறியுள்ளன.

இது குறித்து சாம்னா நாளிதழின் தலையங்கத்தில், "மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் அமையும் என்பதைச் சொல்ல அரசியல் பண்டிதர் யாரும் தேவையில்லை. கள நிலவரமே அதனைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போதே மக்கள் மனநிலையை உணர முடிந்தது. மக்கள் மீண்டும் மோடியையே தேர்வு செய்வார்கள் எனத் தெரிந்தது.

மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x