Last Updated : 21 May, 2019 03:54 PM

 

Published : 21 May 2019 03:54 PM
Last Updated : 21 May 2019 03:54 PM

வாக்கு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டை 100 சதவீதம் ஒப்பிட்டுப் பார்க்கும் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டில் உள்ள வாக்குகளையும் 100 சதவீதம் ஒப்பிட்டுப் பார்க்க உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுபோன்ற மனு முட்டாள்தனமானது. 2 நாட்களில் புதிய அரசை தேர்வு செய்யப்படும் நிலையில் தொந்தரவு செய்யக்கூடிய மனு என்று நீதிபதிகள் கண்டித்தனர்.

முன்னதாக, 21 எதிர்க்கட்சிகள் சார்பில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு மையங்கள் எனும் விஷயத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதை நிராகரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு மனுவை கடந்த 7-ம் தேதி தள்ளுபடி செய்தது.

அதேசமயம், ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பிறப்பித்த உத்தரவில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குப்பதிவு மையங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகளுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

இச்சூழலில் சென்னையைச் சேர்ந்த டெக் 4 ஆல் எனும் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், வரும் 23-ம் தேதி நடக்கும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டில் உள்ள வாக்குகளையும் 100 சதவீதம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்த மனு விடுமுறைக்கால அமர்வு அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், " ஏற்கெனவே இதேபோன்ற மனுவை தலைமை நீதிபதி பரிசீலித்து உத்தரவிட்டுள்ளார். இப்போது மீண்டும் விடுமுறைக்கால அமர்வு முன் மீண்டும் எடுத்து வருகிறீர்கள். தலைமை நீதிபதியின் உத்தரவை மீறி நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

இது முட்டாள்தனமான மனு. 7 கட்டத் தேர்தல் முடிந்து, வரும் 23-ம் தேதி புதிய அரசு தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், தேர்தல் நடைமுறையைக் குலைக்கும், தவறான நேரத்தில் தாக்கலான மனு. இந்த மனுவை விசாரிக்க முடியாது தள்ளுபடி செய்கிறோம்" என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x