Last Updated : 09 Mar, 2019 08:55 AM

 

Published : 09 Mar 2019 08:55 AM
Last Updated : 09 Mar 2019 08:55 AM

பாகிஸ்தானில் 22 தீவிரவாத முகாம்கள் இயங்கி வருவதாக இந்தியா குற்றச்சாட்டு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய அரசின் உயரதிகாரி ஒருவர், பிடிஐ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:

தீவிரவாதத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் ஆகச்சிறந்த புகலிடமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. தீவிரவாதத்தை ஒரு கொள்கையாகவே அந்நாட்டு அரசு கடைப்பிடித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, பாகிஸ்தானில் 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் 9 பயிற்சி முகாம்களும் அடங்கும். ஆனால், இந்த பயிற்சி முகாம்கள் மீது எந்தவொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை. மாறாக, இந்தியாவுடன் போர் வருவது போன்ற பிம்பத்தை அந்நாட்டு மக்களிடையே ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலை நடத்தியது.

இதனை அந்நாடு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இனியும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பாலகோட் சம்பவத்தை போன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடைபெறும். எனவே, தங்கள் நாட்டில் செயல்படும் தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு உடனடியாக ஒழிக்க வேண்டும். அந்தக் கட்டாயம் பாகிஸ்தானுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x