Last Updated : 15 Mar, 2019 07:05 AM

 

Published : 15 Mar 2019 07:05 AM
Last Updated : 15 Mar 2019 07:05 AM

வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது?- சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமமுக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் நேற்று சந்தித்து பேசினார். அவருடன் அமமுக கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, இளவரசியின் மகன் விவேக், நடராஜனின் சகோதரர் ராமசந்திரன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

சசிகலாவை சந்தித்த பிறகுடிடிவி தினகரன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல்மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை எங்களது கட்சி சார்பில் எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசனை நடத்தினேன். தொகுதிவாரியாக யாரை வேட்பாளராக தேர்வு செய்வது, தேர்தல்அறிக்கையை தயாரிப்பது குறித்துபேசினோம்.

அமமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா சில வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த தேர்தல் எங்களுக்கு முக்கியமானது என்பதால் வேட்பாளர்களை கவனமாகபரிசீலித்து தேர்வு செய்தார். அந்தப் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிட்ட போது இஸ்லாமிய கட்சிகள் ஆதரவு அளித்தன. எனவே அவர்களுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளதால், ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளோம். பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த மாவட்ட காவல் அதிகாரி முடிவை அறிவித்துள்ளார்.

இதேபோல, பொள்ளாச்சி ஜெயராமனின் பேச்சும் சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் அவரது மகன் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் பலியாகி இருக்கிறார். அந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x