Last Updated : 06 Mar, 2019 08:41 AM

 

Published : 06 Mar 2019 08:41 AM
Last Updated : 06 Mar 2019 08:41 AM

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் தாயின் காலில் விழுந்த மத்திய அமைச்சர்

ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் அஜித் பிரதான் இறந்தார். இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில், அஜித் பிரதான் உள்ளிட்டோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் ராணுவம் சார்பில் நேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு அஜித் பிரதானின் தாய் ஹேமகுமாரியும் வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது ஹேமகுமாரியின் காலைத் தொட்டு வணங்கினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதைப் போல மற்றொரு வீரரின் தாயாரின் காலையும் நிர்மலா சீதாராமன் தொட்டு வணங்கினார். இதை வீடியோவில் பதிவு செய்த முசோரியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குப்வாராவில் நடந்த தீவிரவாதிகளுடனான சண்டையில் பிஹாரைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் பின்டு குமார் சிங் இறந்தார், அவரது உடலைப் பெறுவதற்கு பாட்னா விமானநிலையத்துக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் யாரும் செல்லவில்லை. இதை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்தன. ராணுவ வீரரின் உடலைப் பெறுவதற்குச் செல்லாமல், முதல்வர் நிதிஷ் குமாரும், அமைச்சர்களும் பிரதமர் மோடியை வரவேற்கச் சென்றுவிட்டனர் என்ற விமர்சனம் எழுந்தது. இந்த சம்பவத்துக்கு ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் பிரசாந்த் கிஷோர் மன்னிப்புக் கோரினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x