Last Updated : 21 Feb, 2019 01:51 PM

 

Published : 21 Feb 2019 01:51 PM
Last Updated : 21 Feb 2019 01:51 PM

"பிரதமர் பதவியை 2 பொதுத் தேர்தலுக்கு புக் பண்ணிட்டோம்": வியக்கவைத்த தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் பதவியை அடுத்த இரு மக்களவைத் தேர்தலுக்கு நாங்கள் முன்பதிவு செய்திருக்கிறோம் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

மும்பையில் நேற்று விருதுவழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்றார். அப்போது அவரிடம் நடிகர் ரித்திஷ் தேஷ்முக் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு முதல்வர் பட்னாவிஸ் பதில் அளித்தார்.

மகாராஷ்டிராவில் இருந்து சரத் பவார், நிதின் கட்காரி இருவரில் யார் பிரதமராக வருவார் என்று ரித்திஷ் கேட்டார். அதற்கு பட்னாவிஸ், " நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், இனிமேல் இந்த கேள்வி வரக்கூடாது. இந்த மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை பிரதமர் பதவியை நாங்கள் 'புக்' (முன்பதிவு) செய்துவிட்டோம்.

அதேசமயம், 2024-ம் ஆண்டுக்குப்பின், மகாராஷ்டிராவில் இருந்து யாரேனும் பிரதமராக வந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன் " என்றார்.

அதில் பிரதமர் பதவியை இரு மக்களவைத் தேர்தலுக்கு பாஜக 'புக்' செய்துள்ளது என்கிற பட்னாவிஸ் பதில்  , மோடியே அடுத்து பிரதமராக தொடர்வார் என்பதையும் மறைமுகமாக உணர்த்தியதால், அரங்கில் கைதட்டல் எழுந்தது. 

மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக கூட்டணி அமைத்தபோதிலும், வரும் தேர்தலில் முதல்வர் பதவிக்காக இரு கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுவது உண்மையா?  என்று ரித்திஷ் கேட்டார்.

அதற்கு தேவேந்திர பட்னாவிஸ் " சிலவ ிஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டும், அனைத்தையும் வெளிப்படையாக கூற இயலாது. பாஜக, சிவசேனா தொண்டர்களுக்கு இடையே பிரச்சினை இருக்கிறது என்கிற தகவல் பொய்யானது. நாங்கள் இருவரும் இயற்கையாக அமைந்த கூட்டணி. இயற்கைக்கு புறம்பான கூட்டணி அமையும்போது நாங்கள் சேர்வது இயல்புதான். எங்கள் தொண்டர்கள் சூழலை புரிந்துகொண்டு கூட்டணியை ஆதரிக்கிறார்கள்.

நான் மாதோஸ்ரீ இல்லத்துக்கு சென்றபோது, என்னை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வீட்டில் தயாரித்த உணவுகளை அளித்து என்னை அன்புடன் உபசரித்தார். அப்போதே அனைத்தையும் மறந்துவிட்டோம். கூட்டணியை உறுதிசெய்தோம் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x