Last Updated : 30 Jan, 2019 09:48 PM

 

Published : 30 Jan 2019 09:48 PM
Last Updated : 30 Jan 2019 09:48 PM

தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசுவது நேரடி நீதிமன்ற அவமதிப்பே: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீதிபதிகளை வழக்கறிஞர்கள் ஊடகங்களில் விமர்சித்துப் பேசுவதும் தீர்ப்புகளுக்கு அரசியல் சாயங்கள் பூசுவதும் வாடிக்கையாகி வருகிறது, இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்புத்தான் என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

 

ஆனால் அவமதிப்பு என்பது பிரம்மாஸ்திரம் போன்றது எப்போதாவதுதான் பிரயோகப்படுத்தக் கூடியது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மேலும், வழக்குகளை ‘ஊடக விசாரணை’ மூலம் தீர்க்க முடியாது, பார்கவுன்சில் மற்றும் நீதிமன்ற அமர்வுக்கு அதற்கேயுரிய குறைதீர்ப்பு உபாயங்கள் உள்ளன, இதில் வெளிட்தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

விமர்சிக்கப்பட்ட நீதிபதிகள் ஊடகங்களை நோக்கிச் செல்லக் கூடாது.  வழக்கறிஞர்கள் பணம் விழுங்கிகளாக இருக்க கூடாது, நியாயமான தீர்ப்பு வழங்கும் நடைமுறையில் இவர்கள் தாக்கம் செலுத்துதல் கூடாது.

 

நீதிபதிகள் மற்றும் நீதித்துறை மீது அவ்வப்போது பலவிதங்களில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது, நீதித்துறையில் சேவையாற்றுவதற்காக நிறைய தியாகங்கள் செய்யப்படுகிறது, ஆகவே இது ராணுவச் சேவைக்கு சற்றும் குறைந்ததல்ல.

 

எப்போது அரசியல் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு எப்பக்கம் சாய்ந்தாலும் அதற்கு அரசியல் சாயம் பூசுவது வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் வழக்கமாக இருந்து வருகிறது.

 

பார் கவுன்சில் உறுப்பினர்கள் நீதிபதிகளை விமர்சிப்பதற்காக ஊடகங்களை நாடி தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசுவது  நேரடியான கோர்ட் அவமதிப்பே, இது கோர்ட் அவமதிப்பின் ஒரு தீவிர வடிவமே.

 

 நீதிமன்றத்துக்கு அவமதிப்பு என்பது ஒரு பெரிய அதிகாரம்தான் ஆனாலும் அதை பொறுப்புணர்வுடன் தான் கோர்ட் கையாள்கிறது. அவமதிப்பு வழக்கு என்பது ஒரு பிரம்மாஸ்திரம் அதனை எப்போதாவது பயன்படுத்தினால்தான் அது சிறப்பாகச் செயல்படும். அதே வேளையில் நீதிபதி நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றியாக வேண்டும். அதற்காக தேவைப்படும் நேரத்தில் அவமதிப்பு வழக்கைப் பயன்படுத்தும், முறையான தண்டனையையும் வழங்கும்.

 

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் கோர்ட் தீர்ப்புகளை வைத்து நீதிபதிகள் மீது அரசியல் சாயம் பூசுவது நீதித்துறையையே அவமதிப்பதாகும், இதன் மூலம் சாமானிய மனிதர்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை இழக்கச் செய்யப்படுகிறது.

 

எந்த நீதிபதி மீதாவது குறை இருந்தால், புகார் இருந்தால் அதற்குரிய முறையான வழிமுறைகளில் உயர் அமைப்புக்கு புகார் தெரிவிக்க வேண்டும், அதற்காக நீதித்துறை மீதே கறை பூசுவதை அனுமதிக்க முடியாது.

 

 நீதித்துறையில் ஊழல் பொறுத்துக் கொள்ள முடியாதது, ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படும்போதுதான் வழக்கறிஞர்கள் தெருவில் இறங்கிப் போராடலாம், ஸ்ட்ரைக் செய்யலாம்

 

ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பு வழக்கு வாதங்களின் தரம், மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அளிக்கப்படுவதாகும்.  இதில் நீதிபதியாகட்டும், வழக்கறிஞராகட்டும் செருக்குக்கும் ஆணவத்துக்கும் இடமில்லை.

 

வழக்கறிஞர்கள் தங்கள் கடமையை சுதந்திரமாக செய்ய முடியாமல் துதிபாடுவோராக இருந்தால் இது நீதி அமைப்பையும் நீதித்துறையும் கீழ் நிலைக்குத் தள்ளுவதாகும்

 

சட்ட ஒழுங்கமைப்பில் பார்கவுன்சிலின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நீதிபதிகள் பேசக்கூடாது என்பதால் வழக்கறிஞர்கள்தன் அதன் செய்தித் தொடர்பாளர்களாக இருக்க வேண்டும். நேர்மையான நீதிபதிகளைக் காப்பது வழக்கறிஞர்கள் அமைப்பின் கடமையாகும்.  அதாவது அதே சமயத்தில் ஊழல் நீதிபதிகள் தப்பக்கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

 

இவ்வாறு அருண் மிஸ்ரா, வினீத் சரண் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நீண்ட அறிவுரை வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x