Published : 19 Jan 2019 08:18 AM
Last Updated : 19 Jan 2019 08:18 AM

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் இன்று மாநாடு: திமுக உட்பட 18 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

மேற்குவங்க தலைநகர் கொல்கத் தாவில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெறு கிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங் கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத் தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பியுள்ளார். இதையேற்று 18-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டில் பங் கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஸ்டாலின் பங்கேற்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் நேற்றிரவே கொல் கத்தா சென்றடைந்தனர்.

கொல்கத்தா விமான நிலையத் தில் அகிலேஷ் யாதவ் கூறிய போது, "நாட்டு மக்கள் புதிய பிரதமரை எதிர்பார்க்கின்றனர்" என்று தெரிவித்தார்.

ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசிய மாநாடு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, பாஜக அதிருப்தி தலைவர்கள் சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் மாநாட் டில் பங்கேற்க உள்ளனர் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித் துள்ளது.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயா வதி மாநாட்டில் பங்கேற்கவில்லை, எனினும் அவரது சார்பில் மூத்த தலைவர் ஒருவர் மாநாட்டில் பங்கேற்பார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு

தெலங்கானாவின் ஆளும் கட்சி யான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சி யான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டணியை ஆதரிக்கின்றன. அந்த வகையில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்த கட்சிகளின் வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட் தலைவர்கள் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ராகுல் காந்தி ஆதரவு

இதனிடையே, மம்தா நடத்தும் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கடிதம் அனுப்பினார்.

அதில், “மோடி அரசின் பொய் வாக்குறுதிகளால் நாட்டின் கோடிக் கணக்கான மக்கள் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். பிராந்தியம், பொருளாதார நிலை மற்றும் மதப் பாகுபாடின்றி அனைத்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் குரல்களுக்கு மதிப் பளிக்கும் இந்தியா உருவாக வேண் டும் என மக்கள் விரும்புகின்றனர். ஜனநாயகத் தூண்கள், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை பாஜகவும் மோடி அரசும் அழிக்க விரும்புகின்றன. இவற்றை பாது காத்தால் மட்டுமே உண்மையான தேசியவாதம் மற்றும் வளர்ச்சியை பாதுகாக்க முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங் கிணைந்துள்ளன. இந்த ஒற்றுமை மாநாட்டுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன்” என்று ராகுல் கூறியுள்ளார்.

எனினும் கொல்கத்தா மாநாட் டில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்க மாட்டார்கள் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள் ளன. காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் சிங்வி பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

5 லட்சம் பேர் பங்கேற்பு

மாநாட்டையொட்டி காலையில் பேரணியும் மாலையில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மேற்கு வங்கம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்கத்தாவில் குவிந்துள்ளனர். போலீஸார் மற்றும் திரிணமூல் தொண்டர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொண் டர்கள் தங்குவதற்காக ஆங் காங்கே சிறப்பு முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x