Last Updated : 07 Dec, 2018 09:31 AM

 

Published : 07 Dec 2018 09:31 AM
Last Updated : 07 Dec 2018 09:31 AM

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவது உறுதி:  கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ. 5,912 கோடி செலவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணைக் கட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக விவாதிப்பதற் காக கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பரமேஷ்வர், நீர்வளத் துறை டி.கே.சிவக்குமார், பொதுப்பணித் துறை அமைச்சர் தேஷ் பாண்டே, பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அசோக், காங்கிரஸ் சார்பில் மாநில தலை வர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மைசூரு மண்டியா மாவட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதி கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்றுவது குறித் தும், அதற்கு தமிழக அரசு தெரிவித் துவரும் எதிர்ப்பை சமாளிப்பது குறித்தும் முதலில் விவாதிக்கப்பட் டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்துள்ள மனுவுக்கு பதில் அளிப்பது, காவிரி நீர் மேலாண்மை ஆணைய‌த்தின் ஆட்சேபனைக்கு பதில் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு பிறகு டி.கே.சிவக்குமார் கூறியபோது, “மேகேதாட்டு திட்டத்துக்கு தடை வாங்க முயற்சிக்கும் தமிழக அரசின் முயற்சியை சட்டப்படி தடுப்போம். இந்த பிரச்சினையில் தமிழகத்துடன் சண்டையிட விரும்பவில்லை'' என்றார்.

இதனிடையே டி.கே.சிவக்குமார் நேற்று தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், “மேகேதாட்டு திட் டத்தை நட்பு ரீதியாக பேசித் தீர்த்துக்கொள்ள கர்நாடகா விரும்பு கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் மழைக்காலத்தில் வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியும். ஆனால் இந்த திட்டத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளனர். மேகே தாட்டு திட்டம் குறித்து புரிய வைக் கவும், சந்தேகங்களைக் களை யவும் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x