Published : 07 Dec 2018 08:57 AM
Last Updated : 07 Dec 2018 08:57 AM

ராஜஸ்தான், தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு: வரும் 11-ம் தேதி 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ராஜஸ்தான், தெலங்கானா சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற் கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளியாகிறது.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஒரு தொகுதிக் கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட் டுள்ளது. 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 51,965 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 4.76 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் னணு வாக்குப் பதிவு மற்றும் விவிபிஏடி இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒரு அனைத்து பெண்கள் வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இதுபோல தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் சுமார் 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 32,815 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தெலங்கானாவில், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியும் பாஜகவும் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர பகுஜன் சமாஜுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் உள்ளது.

இரு மாநிலங்களிலும் தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங் கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங் களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

ஏற்கெனவே தேர்தல் நடை பெற்ற சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகியவற்றுடன் இந்த 2 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக் கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x