Published : 12 Dec 2018 08:24 AM
Last Updated : 12 Dec 2018 08:24 AM

தெலங்கானாவில் டிஆர்எஸ், மிசோரம் மாநிலத்தில் எம்என்எப் ஆட்சி அமைக்கிறது; ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி.யில் காங்கிரஸ் அமோகம்: 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு

புதுடெல்லி

ராஜஸ்தான், சத்தீஸ்கர்  மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங் கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற் றுள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி, மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி (என்என்எப்) ஆகியவை அமோக வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை வகித்தன. இதனால், ஆட்சியைக் கைப்பற்ற இரு கட்சிகளும் பிற கட்சிகளின் ஆதரவை பெற முயன்று வருகின்றன.

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் உள்ள 90 இடங்களுக்கு கடந்த நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசம், 40 இடங்களைக் கொண்ட மிசோரம் ஆகிய சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 28-ல் தேர்தல் நடந்தது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மற்றும் 119 இடங்களைக் கொண்ட தெலங் கானா சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தானில் வேட்பாளர் இறந்ததால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 5 மாநில பேரவைத் தேர்த லில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. ராஜஸ்தானில் ஆளும் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. எனினும் முதல்வர் வசுந்தரா ரஜே ஜால்ரபதான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதுபோல காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும் சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிக்கு முற்றுப்புள்ளி

சத்தீஸ்கர் மாநிலத்தில். காங் கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜகவின் 15 ஆண்டு கால தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் பாஜக சார்பில் போட்டி யிட்ட முதல்வர் ரமண் சிங் ராஜ்நந்த் கான் தொகுதியில் வெற்றி பெற்றுள் ளார். எனினும் பாஜக தோல்வி அடைந்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற் கான கடிதத்தை ஆளுநரிடம் நேற்று சமர்ப்பித்தார். பதான் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பூபேஷ் பாகல் வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் காலை முதலே மாறி மாறி முன்னிலை வகித்தன. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 116 இடங்களை ஒட்டியே இரு கட்சிகளும் முன்னிலை வகித்தன. இதையடுத்து, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவைப் பெற இரு கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதை யடுத்து சந்திர சேகர ராவ் 2-வது முறையாக முதல்வராக பதவி யேற்க உள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அங்கு மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வர் லால் தன்ஹாவ்லா (காங்கிரஸ்), தான்போட்டியிட்ட 2 தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளார். 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற வுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் கோட்டை யாக விளங்கிய சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங் கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கை ஓங்கி உள்ளது. இது பாஜகவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x