Published : 15 Dec 2018 09:02 AM
Last Updated : 15 Dec 2018 09:02 AM

ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக தலைவர்கள் வலியுறுத்தல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களிடமும் ராணுவத்திடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாஜக தலைவர் அமித் ஷா: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். கடைசி யில் உண்மை வென்றுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய் களைக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். நாட்டு மக்களிடமும் ராணுவத் திடமும் அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுலிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கலாம்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்: அரசியல் ஆதாயத்துக் காக ரஃபேல் போர் விமான ஒப் பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தினார். அவரது குற்றச்சாட்டுகளால் சர்வதேச அள வில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. இந்த விவ காரம் தொடர்பாக நாடாளு மன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்: ரஃபேல் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தோடு அனைத்து குற்ற ச்சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ரஃபேல் ஒப்பந்தம் நேர்மையானது, ஒளிவு மறைவற்றது.

தொழிலதிபர் அனில் அம்பானி: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக என் மீதும் எனது நிறுவனம் மீதும் அடிப்படை ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை அனைத்தும் பொய் என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு எப் போதும் துணை நிற்போம். 'இந்தியா வில் தயாரிப்போம்', 'திறன்சார் இந்தியா' திட்டங்களை வெற்றி பெறச் செய்ய அயராது பாடுபடு வோம்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா: ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மத்திய அர சின் நடவடிக்கை சரி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள் ளது. எனவே இனிமேலும் இந்த விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத் தின்போது எழுப்ப முடியாது என்று நான் நினைக்கிறேன்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல்: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசா ரணைக்கு மத்திய அரசு ஏன் பயப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

ராகுல் மீண்டும் கேள்வி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ரஃபேல் போர் விமான ஒப்பந் தத்தில் பெரிய அளவில் ஊழல் நடந் துள்ளது. எனவேதான் இதை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண் டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அப்போதுதான் இதில் சம்பந் தப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரது பெயர்கள் வெளிவரும்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை (சிஏஜி) அறிக்கையை உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையை நாங்கள் கேட்கும்போது நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. இதுதொடர் பாக நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பலமுறை கேட்டும் அதை அவையில் தாக்கல் செய்ய வில்லை.

அதுபோன்ற அறிக்கை இது வரை நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன்பு வரவில்லை.

அந்த அறிக்கை எங்கு சென்றது என்பதே தெரியவில்லை. பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட வேறு பொதுக் கணக்குக் குழுவிடம் அந்த அறிக்கை சென்றுவிட்டதா?

எனவேதான் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கி றோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x