Last Updated : 03 Dec, 2018 08:23 PM

 

Published : 03 Dec 2018 08:23 PM
Last Updated : 03 Dec 2018 08:23 PM

‘சட்ட விரோத பசுவதை’ குற்றச்சாட்டைத் தொடர்ந்து  விளைந்த பயங்கர வன்முறை: உ.பி.யில். காவல் ஆய்வாளர் கொலை, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

உத்தரப் பிரதேச புலந்த்சாகரில் திங்களன்று ‘சட்ட விரோத பசுவதை’ விவகாரம் காரணமாக கடும் வன்முறை வெடித்தது இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் ஒரு வாலிபர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

கும்பல் ஒன்று பயங்கர வன்முறையில் ஈடுபட்டு போலீஸ் நிலையத்தைச் சூறையாடி காவல் வாகனம் ஒன்றை தீக்கிரையாக்கினர். சூழ்நிலையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் ஒரு வாலிபர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் சிங்ராவதி குறுக்குச் சாலையில் நடந்தது, இங்கு நூற்றுக்கணக்கானோர் கூடினர். வயல் ஒன்றில் பசுமாட்டின் உடல் பாகங்களும், கன்னுக்குட்டியும் இறந்து கிடந்தையடுத்து சட்டவிரோத பசுவதை என்று நினைத்த கும்பல் ஒன்று சாலைமறியலில் ஈடுபட்டது, இதனையடுத்துதான் அங்கு போலீஸார் வந்தனர், அவர்கள் வந்தவுடன் சாலி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர், ஆனால் திடீரென ஒரு கும்பல் போலீஸார் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் நிலையத்தையும் வாகனத்தையும் எரித்தனர், கார்கள், இருசக்கர வாகனங்கள் என்று அவர்கள் வன்முறை தலைவிரித்தாடத் தொடங்கியது இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதில் கும்பல் வன்முறையில் ஸ்யானா காவல் நிலைய சுபோத் குமார் பலியானார். துப்பாக்கிச் சூட்டில் சுமித் எனும் 20 வயது இளைஞர் பலியாகினார்.

இது குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த விசாரணைக்குழு விரைவில் உ.பி.அரசுக்கு அறிக்கைத் தாக்கல் செய்யவுள்ளது.

வன்முறையாளர்கள் காவல்நிலையத்தை தடி, கம்புகள் மற்றும் கற்களால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மாட்டின் உடல்பாகங்களை ட்ராக்டரில் கொண்டு வந்த கிராம மக்கள் கடும் கோபத்துடன் சிங்கர்வாதி காவல்நிலைய அதிகாரிகளை குற்றவாளிகளை தண்டிக்குமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து போலீஸார் மக்களை ஆசுவாசப்படுத்த முயன்றனர், ஆனால் அவர்கள் கேட்கவில்லை,வாக்குவாதன் முற்றி வன்முறையாக வெடித்தது என்று ஏடிஜி, பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

இதன் முழு விவரம் இன்னும் தெரியவில்லை, மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x