Last Updated : 24 Nov, 2018 12:58 PM

 

Published : 24 Nov 2018 12:58 PM
Last Updated : 24 Nov 2018 12:58 PM

ரூ.9 கோடி மதிப்புள்ள அரிய ‘தக்சக்’ பாம்புகளை கடத்தியவர் கைது

பாதுகாக்கப்பட்ட பிரிவிலும், மிகவும் அரிதாகக் காணப்படும் தக்சக்(gecko) இன பாம்புகளைக் கடத்த முயன்றவரை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர். சர்வதேச சந்தையில் இந்த தக்சக் பாம்புகளின் விலை ரூ.9 கோடியாகும்.

இந்தியில் இதை தக்சக் பாம்புகள் என்றும், ஆங்கிலத்தில் கெக்கோ ஸ்னேக் என்றும் அழைக்கின்றனர். வழக்கில் இதைப் பறக்கும் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. உலகில் மிக, மிக அழிந்துவரும் ஊர்வன உயிரினத்தில் இந்த தக்சக் பாம்புகள் உள்ளன.

இந்த தக்சக் பாம்புகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்கதேசத்தம், மேற்கு வங்கத்தில் அரிதாகக் காணப்படுகிறது. இந்தப் பாம்புகளுக்கு சீனா, ஜப்பானில் நல்ல விலை இருப்பதால், இதை அதிகமாக கடத்திச் செல்கின்றனர். ஆனால், இதை மத்திய அரசு அரிய, அழிந்துவரும் ஊர்வன, விலங்குகள் பட்டியலில் வைத்துள்ளது. இதைக் கடத்துவதும், கொல்வதும் குற்றமாகும்.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்ட போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் சாக்கு மூட்டையே போலீஸார் பிரித்துக் காட்டக் கூறினார்கள். அப்போது, அந்தச் சாக்கு மூட்டையைப் பிரித்தபோது, அதில் அரியவகை தக்சக் பாம்புகள் இருந்தன.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் பாம்பைக் கடத்தியவர் பெயர் இஷா சேக் என்றும், முர்ஷிதாபாத்தில் உள்ள பராக்கா பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

இந்த தக்சக் பாம்புகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. சர்வதேச சந்தையில் இந்த தக்சக் பாம்பின் விலை ரூ,9 கோடி பெறும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “ சேக்கிடம் விசாரணை நடத்தியதில், மால்டா மாவட்டத்தில் உள்ள காளிசாவக் வனப்பகுதியில் பிடித்ததாகத் தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரு கடத்தல்காரர்களிடம் இந்தப் பாம்புகளை விற்பனைக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். இந்தப் பாம்புகள் உள்ளூர் வனத்துறையினரிடம் போலீஸார் ஒப்படைக்கப்பட்டன எனத் தெரிவித்தனர்.

இதன்பின், ஜாங்கிபுர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சேக்கை ஆஜர்படுத்தி, போலீஸார் மேல் விசாரணைக்காகக் காவலில் எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x