Last Updated : 23 Nov, 2018 09:05 AM

 

Published : 23 Nov 2018 09:05 AM
Last Updated : 23 Nov 2018 09:05 AM

அம்புக்காயத்துடன் வந்த அமெரிக்கர் மீனவர்களிடம் கடிதம் ஒன்றை அளித்து விட்டு மீண்டும் தீவுக்குள் சென்றார் - அந்தமான் டிஜிபி

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பழங்குடியினரால் அம்பெய்திக் கொல்லப்பட்ட 26 வயது ஜான் ஆலன் சாவ் அங்கு பழங்குடியினரை கிறித்துவ மதத்துக்கு மாற்றத்தான் சென்றார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள செண்டினல் தீவுக்குச் சென்ற அமெரிக்கர் அங்குள்ள புராதனப் பழங்குடியினரால் அம்பெய்திக் கொல்லப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து அவர் தவறாக அங்கு சென்று விட்டார் என்றும் மதம் மாற்றும் மிஷனரி பணிகளுக்காக அல்ல என்றும் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது ஜான் ஆலன் சாவ் 5வது முறையாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வந்துள்ளார். டூரிஸ்ட் வீசாவில் வந்துள்ளார், வந்த இடத்தில் அம்பெய்திக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் ஜான் ஆலன் சாவ் செண்டெனல் தீவுக்கான பயணத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை. இவர் கொல்லப்பட்டது கூட சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜான் ஆலனின் தாயார் அனுப்பிய மின்னஞ்சல் மூலம்தான் தெரியவந்துள்ளது, அதாவது அந்தமான் தீவுகளுக்கு தன் மகன் சென்றுள்ள விவரமே அவர் தாயார் அனுப்பிய மெயில் மூலம்தான் தெரியவந்தது.

மேலும் ஒரு அதிகாரி கூறும்போது ஜான் ஆலன் சாவின் உடல் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் பழங்குடியினரை கிறித்துவ மதத்துக்கு மாற்றுவதற்காகச் சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.

“அவரை மத போதகர் என்றோ மிஷனரி என்றோ அழைக்க முடியாது. அவர் கடவுள், ஜீசஸ் என்று பல இடங்களில் கூறிவந்தாலும் அவர் மத போதகரோ, மிஷனரியோ இல்லை. அவர் தன்னை இந்தப் பயணத்தில் ஈடுபடுத்திக் கொண்ட விதமும் அவர் தவறாக பழங்குடியினர் தீவுக்குச் சென்றதாகவே தெரிகிறது.

இவரைக் கொண்டு வந்து விட்ட மீனவர்களிடம் நவம்பர் 16ம் தேதி இவரை அழைத்துச் செல்ல வந்தபோது அவர்களிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார் ஜான் ஆலன் சாவ். அவர் மீது அம்புக்காயம் இருந்தது, ஆனால் மறுபடியும் தீவுக்குச் சென்றுவிட்டார்” என்று அந்தமான் டிஜிபி தீபேந்திர பதக் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தன் தாயார் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் தடை செய்யப்பட்ட இடங்கலுக்குச் செல்ல ஏசுவின் ஆசீர்வாதம் தனக்கு இருப்பதாகவும் ஜான் ஆலன் எழுதியுள்ளார். நவம்பர் 16ம் தேதியன்று சிதியாதபு என்ற இடத்திலிருந்து மீனவர் தோணியில் பயணித்து செண்டினெல் தீவுக்கு அருகில் சென்றுள்ளார்.

 பிறகு அங்கிருந்து தன்னுடைய சொந்தப் படகில்தான் சென்றுள்ளார். நவம்பர் 14ம் தேதியே தீவுக்குள் நுழைய முயன்று தோல்வியடைந்தார். ஜான் ஆலன் சாவ்வின் குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் சாவ் கொல்லப்பட்டார் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுவதாக குறிப்பிட்டிருந்தனர்.

அதாவது செண்டெனெல் பழங்குடியினரை சந்திக்கும் முயற்சியில் கொல்லப்பட்டதாக அவர்கள் உறுதி செய்யப்படாத தகவலைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஜான் ஆலன் சாவ் என்பவரை பற்றி வரும் செய்திகளில், ‘அவர் ஒரு மிஷனரி, மதபோதகர், சர்வதேச கால்பந்து பயிற்சியாளர், மலையேறும் விரர், அவருக்கு கடவுள் வாழ்க்கையை நேசிப்பவர், உதவும் உள்ளம் கொண்டவர், செண்டனெல் மக்கள் மீது அவருக்கு அன்பு இருந்தது’ என்றெல்லாம் கூறப்பட்டிருந்தன, என்று குடும்பத்தினரின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நவம்பர் 17ம் தேதி உடல் ஒன்று கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்ததை மீனவர்கள் பார்த்தனர். உடலின் உருவெளித்தோற்றம், சூழ்நிலை ஆகியவை இது ஜான் ஆலன் சாவின் உடல்தான் என்று அடையாளம் காட்டியது” என்று போலீஸார் தெரிவித்தனர். “நாங்கள் தீவுக்குச் செல்ல முடியவில்லை. எப்படி இந்த விவகாரத்தைக் கையாள்வது என்பதற்கான உத்திகளை யோசித்துக் கொண்டிருந்தோம். மானுடவியலாளர்கள், கல்வியியல் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் சந்தித்து ஆலோசனைகள் பெற்றோம்.

வானிலிருந்து தீவினை ஆய்வு செய்தோம், கப்பலில் தூரத்திலிருந்து தீவினைப் பார்த்தோம். ஆனால் எங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை” என்றார் டிஜிபி பதக். இந்தத் தீவுக்கு அயல்நாட்டினரோ, யாருமோ செல்ல ’கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கான அனுமதி’ பெற வேண்டும், அந்த அனுமதி ஜூன் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டாலும், வனத்துறையிடமிருந்து அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். சாவ் ஒருவரிடமும் அனுமதி பெறாமல் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து மீண்டும் ‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கான அனுமதி’ சட்டத்தை மீண்டும் அமல் படுத்துவார்களா என்று கேட்ட போது, இப்போதைக்கு அவ்வாறு இல்லை, இந்த விவகாரம் குறித்து முறையாகப் பரிசீலிக்கப்பட்டு பிறகு முடிவெடுக்கபப்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x