Last Updated : 25 Nov, 2018 09:48 AM

 

Published : 25 Nov 2018 09:48 AM
Last Updated : 25 Nov 2018 09:48 AM

அயோத்தியில் குவியும் இந்துத்துவா அமைப்பினர்:பதற்றம் காரணமாக பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு

விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்தும் தர்மசபை இன்று அயோத்தியில் தொடங்கு கிறது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பிறகு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற் காக இந்துத்துவா அமைப்பினர் ஆயிரக்கணக் கில் குவிந்துள்ளனர் இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பும் பலப்படுத் தப்பட்டுள்ளது.

ராமர் கோயில் மீதான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜன வரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த இந்துத்துவா அமைப் பினர், ராமர் கோயிலுக்காக சட்டம் இயற்றக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருகின் றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (ஞாயிற்றுக் கிழமை) உத்தரபிரதேசத்தின் அயோத்தி, மகாராஷ்ட்ராவின் நாக்பூர் மற்றும் கர்நாடகா வின் பெங்களூரூ ஆகிய நகரங்களில் விஎச்பி-யின் தர்மசபை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தைப் போன்று, பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர், அயோத்தியில் இந்துத் துவா அமைப்பினர் கூடியது கிடையாது. இதற்கு முன்பு 2002 மார்ச் 15-ல் விஎச்பி நடத்திய சிலை தானம் நிகழ்ச்சியில் அயோத்தி அமைந்துள்ள பைஸாபாத் மாவட்டம் முழுவதும் சீல் வைக் கப்பட்டு வெளிஆட்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தர்ம சபைக்கு அவ்வாறு இல்லாமல் இந்துத்துவா வினரை அனுமதித்ததால் அயோத்தியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து, ’இந்து தமிழ்’ நாளிதழிடம் விஎச்பி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, ‘காலை 11.00 மணி முதல் மாலை 4.00 வரை மட்டுமே இந்த தர்மசபை கூட்டம் நடக்கிறது. இதனால், அயோத்தி வாழ் முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. இக்கூட்டத்தினால் எந்த பிரச்சனையும் வராது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனத் தெரிவித்தார்.

சிவசேனாவின் தனிக் கூட்டம்

இதனிடையே, பாபர் மசூதி இடிப்புக்கு பொறுப்பேற்ற சிவசேனா கட்சியினர், அயோத்தி யில் தனியாக கூட்டம் நடத்துகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணியில் இருந்து தனித்திருப்பதுபோல் ஆர்எஸ்எஸ், விஎச்பியிடம் இருந்தும் சிவசேனா வினர் விலகி நிற்கின்றனர். தமது கூட்டத் துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத் ததை அடுத்து, இந்த நிகழ்ச்சியை அயோத்தி வாசிகளுடன் சந்திப்பு என சிவசேனா பெயர் மாற்றியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் அயோத்திக்கு வந்துள்ளனர்.

சரயு நதியின் ஆரத்திக்கு பின்னர், உத்தவ் தாக்கரே கூறும்போது, ‘மத்தியில் வாஜ்பாய் தலைமையில் முன்பு அமைந்தது கூட்டணி ஆட்சி என்பதால் ராமர் கோயிலை கட்ட முடிய வில்லை. தற்போது தனிப்பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் பாஜக அரசு, இந்த விவகாரம் தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். கோயில் கட்டுவதற்கான தேதியை இப்போதே அறிவிக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத் உத்தரவு

இதனிடையே இந்த இரண்டு கூட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு, அயோத்தியில் கூடுதல் டிஜிபி தலைமையில் தனியாக பாதுகாப்பு படை அமர்த்தப்பட்டுள்ளது. இதில், 1 டிஐஜி, 3 மூத்த எஸ்பிகள், 10 ஏஎஸ்பிகள், 21 துணை எஸ்பிகள், 160 ஆய்வாளர்கள் மற்றும் 700 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், உ.பி. சிறப்பு படையின் 42 கம்பெனிகள், 5 மத்திய பாதுகாப்பு படைக் குழுக்கள் மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் ஆகியோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ராமஜென்ம பூமி பகுதியை சுற்றி ஏற்கனவே உள்ள 144 தடை உத்தரவு மீறப்படக் கூடாது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தர விட்டுள்ளார்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அயோத்தியைச் சேர்ந்த பாபர் மசூதி தரப்பு மனுதாரர் இக்பால் அன்சாரி கூறும்போது, ‘உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி இங்கு யாராலும் கோயில் கட்ட முடியாது. விஎச்பியின் தர்மசபை கூட்டத்துக்கு எங்கள் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதற்காக வெளி ஆட்களினால் கடந்த காலங்களில் நிகழ்ந்தது போன்ற கலவரம், பொருள் இழப்பு ஏற்படாது என நம்புகிறோம். இதை மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு படைகள் உறுதி செய்ய வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x