Last Updated : 25 Nov, 2018 04:23 PM

 

Published : 25 Nov 2018 04:23 PM
Last Updated : 25 Nov 2018 04:23 PM

‘பிரதமர் மோடியின் தந்தை குறித்து யாருக்கும் தெரியாது’: முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சைப்பேச்சு

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராஜ் பப்பர், சி.பி. ஜோஷி ஆகியோர் பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி சர்ச்சையான நிலையில், அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பிரமதர் மோடியின் பரம்பரை குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ஜோஷி சமீபத்தில் பேசுகையில், பிரதமர் மோடி, அமைச்சர் உமா பாரதி, பெண் சாமியா சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு இந்துமதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சர்ச்சையாகப் பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர், பிரதமர் மோடியின் அம்மா வயதுபோல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து செல்கிறது என்று பிரதமர் மோடியின் தாயாரை அவதாறாப் பேசினார். இதற்குப் பிரதமர் மோடியும் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உள்கட்சிக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ் முட்டம்வார் பேசியதுதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விலாஸ் முட்டம்வார் பேசுகையில், “ நீங்கள் பிரதமராக வருவதற்கு முன் உங்களை யாருக்கேனும் அடையாளம் தெரியுமா?. இப்போதுகூட உங்களின் தந்தையின் பெயர் குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையின் பெயர் அனைவருக்கும் தெரியும்.

இந்த நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தியின் தந்தையை யார் எனக் கேட்டால் ராஜீவ் காந்தி என்று அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தியின் பாட்டி யார் என்று கேட்டால், இந்திரா காந்தி என்றும், ராகுல் காந்தியின் கொள்ளுதாத்தா ஜவஹர்லால் நேரு என்று அனைவருக்கும்  ராகுல் காந்தியின்  பரம்பரையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் மோடியின் தந்தையை இன்றுவரை யாருக்கும் தெரியாது “ எனப் பேசி இருந்தார்.

இந்த வீடியோவை பாஜகவும் பல்வேறு தளங்களிலும் தங்களின் ட்விட்டர் தளத்திலும் பகிர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x