Last Updated : 12 Oct, 2018 08:35 AM

 

Published : 12 Oct 2018 08:35 AM
Last Updated : 12 Oct 2018 08:35 AM

நிதீஷ் குமாரை நோக்கி காலணி வீச்சு: இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரை நோக்கி இளைஞர் ஒருவர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இளைஞரை ஐக்கிய ஜனதா தளக் கட்சி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர்.

சமூக சீர்திருத்தவாதி ஜெய் பிரகாஷ் நாராயணின் பிறந்த நாளையொட்டி, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பாட்னாவில் நேற்று கருத்தரங்கம் நடை பெற்றது. இந்தக் கருத்தரங்குக்கு அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் தலைமை வகித்தார்.

இந்நிலையில், கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், கூட்டத்திலிருந்து எழுந்த இளைஞர் ஒருவர், நிதீஷ் குமாரை நோக்கி காலணி வீசினார். ஆனால் அவர் மீது செருப்பு விழவில்லை. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் அந்த இளைஞரைக் கடுமையாக தாக்கினர். இதையடுத்து, அங் கிருந்த போலீஸார் உடனடியாக தலையிட்டு அந்த இளைஞரை மீட்டனர்.

விசாரணையில், அந்த இளை ஞர் அவுரங்கபாத்தைச் சேர்ந்தவர் என்பதும், பிஹார் அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தச் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, மேற்கொண்டு விசாரணை நடத்து வதற்காக போலீஸார் அவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x