Last Updated : 03 Oct, 2018 08:42 PM

 

Published : 03 Oct 2018 08:42 PM
Last Updated : 03 Oct 2018 08:42 PM

ரூ.45 ஆயிரம் கோடி கடனை கட்டாதவருக்கு ரபேல் ஒப்பந்தம்: இதுதான் மோடி ஸ்டைல்- ராகுல் காந்தி கிண்டல்

பாதுகாப்புத் துறையில் எந்தவிதமான அனுபவம் இல்லாத, ரூ.45 ஆயிரம் கோடி கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத அனில் அம்பானிக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் மோடி ஸ்டைல் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று கூறி மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது. எந்த விதமான அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கடுமையாகச் சாடி வருகிறது.

இந்நிலையில், அடுத்தவிமர்சனமான ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ரூ.45 ஆயிரம் கோடி திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்  தொழிலதிபர், பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவுக்குச் செல்லக்கூடாது என்று இவரைத் தடுக்கக்கோரி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. ஆனால், பாதுகாப்புத் துறையில் எந்தவிதமான அனுபவம் இல்லாத அந்தத் தொழிலதிபருக்கும் அவரின் நிறுவனத்துக்கு ரபேல் விமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் மோடியின் ஸ்டைலா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி குறிப்பிடுகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள எரிக்சன் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ. 550 கோடி செலுத்துவதாக உத்தரவாதம் அளித்துவிட்டு தற்போது நாட்டை விட்டு அம்பானியும், மற்ற இரு மூத்த அதிகாரிகளும் இந்தியா செல்கிறார்கள். அவர்களை இந்தியா செல்ல தடைவிதிக்க வேண்டும் என்று எரிக்சன் நிறுவனம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஆனால், இதற்குப் பதில் அளித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், பணத்தைச் செலுத்த கூடுதலாக 60 நாட்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x