Published : 04 Oct 2018 08:29 am

Updated : : 04 Oct 2018 08:29 am

 

சூரிய ஒளி மின்சாரம், பிளாஸ்டிக் ஒழிப்புக்கு நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் மோடிக்கு சுற்றுச்சூழல் விருது: ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் வழங்கி கவுரவித்தார்

சூரிய ஒளி மின்சாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட இயற்கை நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காக ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை யான சுற்றுச்சூழல் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சூரிய ஒளி சக்திக்கு முக்கியத்துவம் அளித்து, சர்வதேச சூரிய ஒளி மின்சார கூட்டமைப்பை உருவாக்க பெரும் பங்கு வகித்தார். மேலும், வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ் டிக் இல்லாத நிலை உருவாக்கப் படும் என்று உறுதி அளித்துள்ளார். இதுபோன்று சுற்றுச்சூழல் பாது காப்புக்கு எடுத்து வரும் நட வடிக்கைகளை கவுரவிக்கும் வகையில், ஐ.நா. சுற்றுச்சூழல் விருதுக்கு பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக் ரோன் ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.

இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் பங் கேற்று பிரதமர் மோடிக்கு ‘சாம் பியன்ஸ் ஆப் தி எர்த்’ (பூமியின் சாம்பியன்) என்ற விருதை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

தூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க வேண் டும் என்பதுதான் எனது தலைமை யிலான அரசின் கொள்கை களாக உள்ளன. பருவநிலை களும் இயற்கை பேரிடரும் கலாச்சாரத்துடன் தொடர்புடை யவை. நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக பருவநிலை மாறாத வரை, இயற்கை பேரிடர்களை தவிர்ப்பது மிகவும் கடினம்.

பிளாஸ்டிக் இல்லாத இந்தியா

வேளாண், தொழிற்துறை கொள்கைகள், வீடுகள் கட்டுமானம், கழிவறை கட்டுமானம் போன்ற எதுவாக இருந்தாலும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க வேண்டியது அவசியம். எனது அரசு கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகை யிலேயே வடிவமைக்கப்படு கின்றன. வரும் 2022-ம் ஆண்டுக் குள் ஒரு முறை மட்டும் பயன் படுத்தக் கூடிய பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம்.

புகை வெளியிடும் அளவை, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 20 முதல் 25 சதவீதம் குறைக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறு பயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவை இந்தியர்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

பருவநிலை மாற்றத்தால் ஏழை கள்தான் அதிகம் பாதிக்கப்பட் டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பொருளாதார வளர்ச்சியை விரைந்து எட்டு வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன்மூலம் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த தொழில்நுட்பம் மற் றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றின் அடிப்படையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல், ‘ஒரு சொட்டு நீர், அதிக பயிர்’ என்ற அடிப் படையில் இயற்கை முறையில் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இயற்கைக்கு மரியாதை

இயற்கைக்கு மரியாதை செலுத்தி வருவது இந்திய கலாச் சாரம். இயற்கைக்கு மதிப்பளித்து வணங்கி வருவதுதான் இந்திய சமூகம். ‘ஸ்வாச் அபியான்’ போன்ற திட்டங்கள் மூலம் மக்கள் மனதில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

எனக்கு கிடைத்த இந்த கவுர வம், இந்திய பழங்குடியினத் தவர்கள் தங்கள் வாழ்க்கையை விட மரங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்குக் கிடைத்த அங்கீகாரம். இதேபோல் மீனவர் களும் விவசாயிகளும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் பங்கு வகிக்கின்றனர். இந்திய பெண் களும் மரங்களை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். உயிருள்ள ஒரு பொருளாகவே இயற்கையை இந்தியர்கள் மதித்து வருகின்றனர்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். -


Popular Articles

You May Like

More From This Category

More From this Author