Published : 25 Aug 2018 08:02 PM
Last Updated : 25 Aug 2018 08:02 PM

நேரமில்லை... கிளம்புவோம் என்று கூறிய கர்நாடக அமைச்சர் மீது எரிந்து விழுந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: பதிலடி கொடுத்த துணை முதல்வர்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ள நிலைமைகளைப் பார்வையிட வந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் மாவட்ட கமிஷனர் அலுவலகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது கர்நாடக அமைச்சர் ச.ரா.மகேஷ் என்பவர் பவ்யமாக இடைமறித்து நமக்கு நேரமில்லை, நாம் உடனே அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் எனவே இந்தச் சந்திப்பை போதும் என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.

இதனையடுத்து நேற்று நிர்மலா சீதாராமன், மகேஷ் மீது கடும் விமர்சனம் வைத்தார், “அமைச்சரே, நான் நிமிடத்துக்கு நிமிடம் என்ற பயணத்திட்டத்தில் செயல்பட்டு வருகிறேன். அதிகாரிகளைச் சந்திப்பதுதான் முக்கியம் எனில் எனக்கு என் குடும்பமும்தான் முக்கியம். (முன்னாள் ராணுவத்தினரை குடும்பம் என்று குறிப்பிட்டு) மத்திய அமைச்சர் ஒருவர் பொறுப்பு அமைச்சர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு இணங்கி நடக்க வேண்டியுள்ளது நம்பமுடியவில்லை” என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

இவை கேமராவில் பதிவாகி வருகிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அறிவுறுத்தப்பட்ட போது கூட “பதிவாகிவிட்டுப் போகட்டும்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இன்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, நிர்மலா சீதாராமனுக்கு கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவிக்கும் போது, “என்னுடைய அமைச்சரவை சகாவை நீங்கள் திட்டியது ஏமாற்றமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எங்கள் அமைச்சர்கள் குடகுவில் வெள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். உங்கள் பக்க உதவிக்காக நாங்கள் எவ்வளவு மரியாதை கொடுக்கிறோமோ அதே மரியாதையை நீங்களும் அளிக்க வேண்டும்.

மாநில அரசுகள் தங்களுக்கான அதிகாரங்களை அரசியல் சாசனம் மூலம்தான் பெறுகிறது. மத்திய அரசின் மூலம் ல்ல. அரசியல் சாசனம்தான் அதிகாரங்களை மாநில, மத்திய அரசுகளுக்கு வழங்கியுள்ளது. அதாவது ஒரு சமத்துவமான கூட்டணி அமைய வேண்டும் என்பதற்காகவே அரசியல் சாசனம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. நாங்கள் மத்திய அரசை விட குறைந்தவர்கள் அல்ல, நாங்கள் கூட்டாளிகளே” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x