Published : 01 Aug 2018 08:04 AM
Last Updated : 01 Aug 2018 08:04 AM

அசாம் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 40 லட்சம் பேர் மீது நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அசாம் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 40 லட்சம் பேர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மொத்தம் 3.29 கோடி பேர் விண் ணப்பித்தனர். இதில் 2.89 கோடி பேர் மட்டுமே பதிவேட்டில் சேர்க் கப்பட்டனர். சுமார் 40 லட்சத் துக்கும் மேற்பட்டோரின் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்தப் பதிவேட்டை அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எப்.நாரிமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

அசாமில் தற்போது வரைவு பதிவேடு மட்டுமே வெளியிடப்பட் டுள்ளது. பதிவேட்டில் விடுபட்ட 40 லட்சம் பேர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

ஆகஸ்ட் 7-ம் தேதி வரை பதிவேடு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். அதன்பின் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை விடுபட்டவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும். இந்தப் பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அசாம் விவகாரம் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. அசாம் குடிமக்கள் பதிவேட்டை வாபஸ் பெற வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவையில் வலியுறுத்தியது.

இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அவையில் பேசியதாவது: அசாமில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிய தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்க முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 1985-ம் ஆண்டில் அன்றைய மத்திய அரசு, அசாம் அரசு, அசாம் மாணவர் கூட்டமைப்பு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் பதிவேட்டை தயாரிக்கும் துணிச்சல் ராஜீவ் காந்திக்கு இல்லை. பாஜகவுக்கு துணிச்சல் உள்ளது. நாங்கள் பதிவேட்டை நிறைவு செய்துள்ளோம். ஆனால் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச மக்களை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையிலும் இதே பிரச் சினை எழுப்பப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியபோது, அசாமில் உண்மையான இந்திய குடிமக்கள் சொந்த மண்ணில் அகதிகளாகி உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக் களவையில் அமளியில் ஈடுபட்டன.

அசாம் குடிமக்கள் பட்டியலில் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த கூட் டம் ஒன்றில் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘அசாமில் லட்சக் கணக்கான பெயர்கள் நீக்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியல் உள்நோக்கத்தோடு தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது. மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையை பொறுத்துக் கொள்ள முடியாது. பாஜகவின் நடவடிக்கைகளால் உள்நாட்டுப் போர் மூளும். நாட்டில் ரத்தக் களறி ஏற்படும்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x