Last Updated : 26 Aug, 2018 08:58 AM

 

Published : 26 Aug 2018 08:58 AM
Last Updated : 26 Aug 2018 08:58 AM

கர்நாடக வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் குமாரசாமி கடிதம்

கர்நாடகாவில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்குமாறு அம்மாநில முதல்வர் குமாரசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கேரளாவை அடுத்து கர்நாடக் மாநிலத்திலும் கனமழை பெய் தது. குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இரண்டு நாட்களுக்கு முன்னர் நேரில் ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங் களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதால், தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்தார். மேலும் நிவாரண பணிகளில் ராணுவப்படை ஈடுபடுத்தப்படும் என்று கூறினார், இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடந்த‌ 14 முதல் 22-ம் தேதி வரை குடகு, தென் கன்னடா, உடுப்பி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன‌. குறிப்பாக குடகு மாவட்டம் மிக மோசமான நிலைக்கு தள்ள‌ப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உருக்குலைந்துள்ளன. 53 முகாம் களில் 7,500 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 170 கிமீ அளவுக்கு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. ஆயிரக்கணக் கான ஏக்கர் காப்பி, தேயிலை தோட்ட பயிர்கள் சேதமடைந்துள் ளன. முதல்கட்ட ஆய்வின்படி, ரூ.3 ஆயிரம் கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள் ளது.

எனவே, வெள்ள நிவாரண‌ நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். அதன் பிறகுதான் மாநிலத்தில் மறுவாழ்வு பணிகளை தொடங்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கர்நாடகாவுக்கு கூடுதல் நிதி வழங்குமாறும் குடகு மாவட்டத்தை பார்வையிட வருமாறும் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தப் போவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x