Last Updated : 15 Aug, 2018 03:42 PM

 

Published : 15 Aug 2018 03:42 PM
Last Updated : 15 Aug 2018 03:42 PM

தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக இறக்கிய அமித் ஷா: வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் கிண்டல்

நாட்டின் 72-வது சுதந்திரதினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக இறக்கிய பாஜக தலைவர் அமித் ஷாவின் செயல் குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கிண்டல் செய்துள்ளது.

நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்று மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக அமித் ஷா இறக்கியதால், சிலநிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

தேசியக் கொடியை ஏற்றுவதற்குச் சரி செய்து, அந்தக் கயிற்றை பாதுகாவலர் அமித் ஷாவிடம் கொடுத்தார். ஆனால் அமித் ஷா தேசியக் கொடியை மேலேஏற்றுவதற்கு பதிலாக, தவறுதலாக இறக்கும் கொடியை பிடித்து இழுக்கத் தொடங்கினார். இதனால், மேலே நிறுத்தப்பட்டு இருந்த தேசியக் கொடி திடீரென கீழே இறங்கி வந்தது.

இதைப்பார்த்த சிலர் கைதட்டினாலும், பலர் சத்தமிட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமித் ஷா அவசர, அவசரமாக கயிற்றைப் பிடித்து மேலே இழுத்து, தேசியக்கொடியை ஏற்றினார். அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமித் ஷா தேசியக்கொடியைக் கீழே இறக்கும் வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து கிண்டல் செய்துள்ளது. அதில், “ தேசியக் கொடியை சரியாக கையாளாத் தெரியாதவர்கள் எவ்வாறு நாட்டைக் கையாண்டு வழிநடத்துவார்கள். தேசியக் கொடிக்கு இன்றுபோல் அவமதிப்பு இனிஅவமதிப்பு செய்ய முடியாது. மக்களிடம் தேசப்பற்றாளர்கள் என்று கூறிக்கொண்டு சான்றளித்துக் கொள்ளும் சிலருக்கு, தேசிய கீதத்தின் மரபுகள், மாண்புகூட தெரியவில்லை எனக் கிண்டல் செய்துள்ளது.

— Congress (@INCIndia) August 15, 2018

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x