Last Updated : 25 Jul, 2018 05:16 PM

 

Published : 25 Jul 2018 05:16 PM
Last Updated : 25 Jul 2018 05:16 PM

“மக்களின் பணத்தை விளம்பரத்துக்குச் செலவழிக்க அரசுக்கு எந்த உரிமையும் இல்லை”: உத்தவ் தாக்கரே விளாசல்

வரி செலுத்துவோரின் பணம் ரூ.4 ஆயிரம் கோடியை எடுத்து மத்திய அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காகச் செலவுசெய்ய எந்தவித உரிமையும் இல்லை என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே காட்டமாத் தெரிவித்தள்ளார்.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், தனது 58-வது பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் பேட்டி அளித்துள்ளார் அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் நாட்டில் இளைஞர்களின் வேலையின்மை நிலவரம் மிகப்பெரிய பிரச்சினையாக எதிரொலிக்கும். இந்தத் தேர்தலில் வெல்வதற்காக இந்துக்களின் உணர்ச்சியை தூண்ட, மீண்டும் ராமர் கோயில் விவகாரத்தை பாஜக தேர்தலுக்கு முன்பாக கையில் எடுக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணத்தை மீட்டு அனைத்து மக்களின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் எனத் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த மக்களின் வங்கிக்கணக்கிலும் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை.

மத்திய அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, வரிசெலுத்துவோரின் பணம் ரூ.4 ஆயிரம் கோடியை செலவு செய்திருக்கிறது. மக்கள் அரசிடம் இருந்து எந்தவிதமான பணத்தையும் பெறவில்லை, மாறாக மக்களின் பணத்தை எடுத்து விளம்பரத்துக்காக அரசு செலவு செய்கிறது.

மக்களின் பணத்தை எடுத்து அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள எந்தவிதமான உரிமையும் இல்லை. மக்களின் பணம், மக்களின் நலனுக்காகவே செலவு செய்யப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வதாக மத்திய அரசு கூறுகிறது.ஆனால், மக்களின் வருமானம் மட்டும் உயரவில்லை.

பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி என் போராடுகிறார்கள், தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அனுமதிக்கக் கோரி, குஜராத் விவசாயிகள் ஏன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள்.

இனி அடுத்து வரும் அனைத்துத் தேர்தல்களிலும் சிவசேனா கட்சி தனியாகவேச் சந்திக்கும். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தினால் ஆதரிக்கத் தயார்.

சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவு நல்லதுதான். எப்படியானாலும், மக்களை ஒருமுறைதான் முட்டாளாக்க முடியும்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பாஜக மீண்டும் அயோத்தி பிரச்சினையை கையில் எடுத்து இந்துக்களின் உணர்வில் விளையாடும். மீண்டும்பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x