Last Updated : 25 Jul, 2018 04:42 PM

 

Published : 25 Jul 2018 04:42 PM
Last Updated : 25 Jul 2018 04:42 PM

“ ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்பிரமணியத்தின் உண்மையான பேச்சை கண்டிப்பாகக் கவனியுங்கள்”: மத்திய அரசுக்கு குட்டுவைத்த ப.சிதம்பரம்

பொருளாதார வல்லுநர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ரகுராம் ராஜன், அரவிந்த் பனகாரியா ஆகியோவின்  உண்மை பேச்சை மத்திய அரசு கண்டிப்பாக கவனித்து நடக்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வலிமையான உண்மைகளைப் பேசும் மக்களின் பேச்சை மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அரவிந்த் பனகாரியா, ரகுராம்ராஜன் மற்றும் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகிய 3 பொருளாதார வல்லுநர்களும் சில உண்மைக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

முதலில் அரவிந்த் பனகாரியா மத்திய அரசின் முட்டாள்தனமான வர்த்தகக் கொள்கை குறித்து உதாரணங்களுடன் தெளிவாக எழுதி இருக்கிறார். இறக்குமதியைக் குறைத்துவிட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகிறது மத்திய அரசு என்று கூறியுள்ளார்.

2-வதாக ரகுராம் ராஜன் உணர்ச்சிகரமாகப் பேசுகையில் முரணாக வரும் கருத்துக்களை சகித்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் அறிவுமிக்க, முதிர்ச்சியான சமூகமாக மாறும் என்று தெரிவித்தார்.

மூன்றாவதாக, அரவிந்த் சுப்பிரமணியன் தன்னுடைய அனுபவத்தில் இருந்து பேசினார். தலைமை பொருளாதார ஆலோசகர் ஏன் எப்போதும் நேர்மையாக இருந்து, அறிவுரை சொல்வதில் விருப்பமில்லாமல் இருந்தார். பணமதிப்புநீக்க நடவடிக்கையில் தன்னைக் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அ ரசு செய்ததால் அவர் மிகுந்த வேதனையோடு இருந்தார்.இவர்களின் பேச்சை மத்தியஅரசு கேட்க வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சமீபத்தில் அரவிந்த் பனகாரியா ஒரு ஆங்கில நாளேட்டில் கட்டுரை எழுதி இருந்தார், அதைக் குறிப்பிட்டு ப.சிதம்பரம் இந்த ட்விட்டில் குறிப்பிட்டார். மத்திய அரசு வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த முயலும்போது,  தேசம் திடீரென பொருளாதார சரிவைநோக்கிச் செல்லும்.

அதேபோல ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இந்து பிசினஸ் லைன் நிழ்ச்சியில் பேசும்போது, முரண்பாடான கருத்துக்களைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத சகிப்புத்தன்மை இல்லாத சூழல் நிலவுகிறது. உங்களின் சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம்தான் புதிய சிந்தனைகள் உருவாகும். இந்த பலம்தான் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும். அப்போதுதான் மிகப்பெரிய கல்வியாளர்கள் எந்தவிதமான அச்சமில்லாமல் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x