Published : 25 Jul 2018 11:27 AM
Last Updated : 25 Jul 2018 11:27 AM

திருமலை ஏழுமலையான் கோயிலில் தலைமுடி காணிக்கை செலுத்துவோருக்கு நாற்காலி வசதி

திருப்பதி ஏழுமலையானுக்கு திருமலையில் நேர்த்தி கடனாக தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக நாற் காலிகளை ஏற்பாடு செய்ய தேவஸ் தானம் முடிவு செய்துள்ளது. இத் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருப்பதி ஏழுமாலையானுக்கு தினமும் 30 முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை தங்களது தலை முடியை நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்தி வருகின்ற னர். திருமலையில் இதற்காகவே ‘கல்யாண கட்டா’ எனும் இடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் தங்கும் விடுதிகளிலும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் தலைமுடியை ஒவ்வொரு மாதமும் தேவஸ்தானம் இ-டெண்டர்கள் மூலம் ஏலம் விடுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 11 முதல் 12 கோடி வரை தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்து வருகிறது. கல்யாண கட்டாவில் தலைமுடி காணிக்கை செலுத்துவோருக்கு, அங்கேயே குளிக்கவும், உடை மாற்றும் அறைகளையும் தேவஸ்தானம் கட்டிக் கொடுத்துள்ளது.

ஆதலால், ஏராளாமான பக் தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். ஆனால், சமீபத்தில் நடந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில், தலைமுடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் கீழே உட்காருவதால் சங்கடமாக உள்ளதாகவும், குறிப் பாக, மாற்றுத்திறனாளி பக்தர் கள், முதியோர், பெண்கள் ஆகி யோர் கீழே உட்கார்ந்து தலை முடி காணிக்கை செலுத்த சங்கடப் படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அறங் காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கல்யாண கட்டாவில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, முதியோர், மாற்று திறனாளிகளுக்காக நாற் காலி வசதி செய்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முதல் கல்யாண கட்டாவில் நாற்காலி வசதி அமைக்கப் பட்டது. இதற்கு பக்தர்கள்டையே நல்ல வரவேற்பு இருப்பதால், விரைவில் கூடுதல் நாற்காலிகள் அமைக்கப்படும் என புட்டா சுதாகர் யாதவ் உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x