Last Updated : 24 Jul, 2018 06:15 PM

 

Published : 24 Jul 2018 06:15 PM
Last Updated : 24 Jul 2018 06:15 PM

ஒரு கையால் அடுத்தவர்கள் மீது சேற்றை வாரி இரைத்துவிட்டு இன்னொரு கையில் தாமரையுடன் தப்ப முடியாது: பாஜக மீது சிவசேனா கடும் தாக்கு

தேர்தல்களில் பணபலத்தைக் காட்டி வென்று வரும் பாஜக எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? ஊழலை ஒழிப்பதில் பாஜக தோல்வியடைந்து விட்டது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாகச் சாடியுள்ளார்.

தனது 58வது பிறந்த தினத்தையொட்டி மாரத்தான் பேட்டியளித்து வருகிறார், அவ்வாறான ஒரு பேட்டியில் அவர் தனது கட்சி எம்.பி.. சஞ்சய் ராவ்த் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களில் கூறியதாவது:

தேர்தல்களில் வெளிப்படையாக பணபலத்தைக் காட்டுவதைப் பாருங்கள். கடந்த 50 ஆண்டுகளில் தேர்தல்களில் இவ்வளவு பணம் புழங்கியதில்லை, கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை அனைத்திலும் வெற்றி பெற எவ்வளவு பணத்தை வாரி இரைக்கின்றனர் என்று.

2ஜி ஊழலை நினைவிருக்கிறதா? இது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இந்தியா மீதான களங்கத்தை ஏற்படுத்திய ஊழலாகும், அதாவது உலகிலேயே ஊழல் மிகுந்த நாடு இந்தியாதான் என்ற அவப்பெயரைப் பெற்றுத்தந்தது. யாரும் இதை உணரவேயில்லை. நாம் நம் நாட்டின் மரியாதையையே சீரழித்து விட்டோம். அதன் பிறகு என்னாயிற்று? ஒரு குற்றச்சாட்டைக்கூட நிரூபிக்க முடியவில்லை.

நடப்பு ஆட்சி ஊழலை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் இப்போது அப்படித்தான் உணர்கிறார்கள். யாராவது நல்லது செய்தால் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு பாய்கிறது. ஊழலை முதலில் நிரூபியுங்கள் வெறுமனே அவர்கள் மீது கரி பூசுவது மட்டும் போதாது. ஒரு கையில் மற்றொருவர் மீது சேற்றை வாரி இறைத்து விட்டு மறுகையில் தாமரையுடன் தப்பிக்க முடியாது

தேர்தலில் புழங்கும் பெருவாரியான பணம் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது, அதாவது ஊழலை சீரியசாக அணுகாததால் மற்ற கட்சிகளும் அதனால் பயனடைந்துள்ளன என்றுதான் கூற வேண்டியுள்ளது.

2014-ல் பாஜகவுக்கு வாக்களித்து மக்கள் தவறிழைத்துவிட்டனரா?

நாட்டு மக்கள் மீது செலுத்தப்பட்ட மிகப்பெரிய மோசடியாகும் அது.

மோடியின் கவனம் இன்னமும் தன் குஜராத் மாநிலத்தில்தான் உள்ளதா?

அப்படியா? நான் அப்படி நினைக்கவில்லை. இப்போது அவரது கவனம் மற்ற நாடுகளின் மீதுதான் உள்ளது

குஜராத்தில் 5,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டதாக செய்திகள் வெளியாகின்றன, இதுதான் உங்கள் வளர்ச்சி மாதிரியா? இது பல உயிர்களைப் பலிவாங்கக் கூடியதாகும்.

வாக்குச்சீட்டு முறையில் இவ்வாறு நடைபெறுவதில்லை. பணபலத்தின் மூலம் வாங்கப்படும் ஜனநாயகம், ஜனநாயகமே அல்ல. இது பணநாயகம்தான்.

இவ்வாறு கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x