Published : 25 Jul 2018 07:09 AM
Last Updated : 25 Jul 2018 07:09 AM

சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து ஆந்திராவில் பந்த்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கைது

ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்துவழங்காததைக் கண்டித்து நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து நேற்று ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார். மேலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால், ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் 25 எம்பிக்களும் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்த முழு அடைப்புப் போராட் டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட் டது.

இந்நிலையில், முழு அடைப்பை ஒட்டி, பஸ் நிலையங்கள், அரசு பணிமனைகள் முன்பு நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா மற்றும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர் காங் கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியி னரை போலீஸார் கைது செய்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

முழு அடைப்பை ஒட்டி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆந்திராவிற்கு வரும் பஸ்கள் மாநில எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டன. மதியம் 12 மணிக்கு பின்னர், போலீஸாரின் பாதுகாப்போடு பல இடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. கடைகள், வணிக வளாகங்கள் ஆங்காங்கே மூடப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பரவலாக பஸ்கள் இயக்கப்படாததால், வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த பக்தர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மதியம் வரை அவதிப்பட்டனர். அதேசமயத்தில், திருப்பதி-திருமலை இடையே வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.

இதனிடையே, புத்தூர் பைபாஸ் சாலையில் தமது ஆதரவாளர் களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நகரித் தொகுதி எம்எல்ஏவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவருமான ரோஜாவை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கிழக்கு கோதா வரி மாவட்டம், புட்டய்ய கூடம் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, போலீஸா ருக்கும், ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த துர்காராவ் எனும் தொண்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x