Published : 25 Jul 2018 07:43 AM
Last Updated : 25 Jul 2018 07:43 AM

திருப்பதி மஹா சம்ப்ரோக்ஷணத்தின் போது ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயி லில், அஷ்டபந்தன பாலாலய மஹா சம்ப்ரோக் ஷணம் ஆகஸ்ட் 12 முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுப்பதற்காக தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் யாதவ் ஆகியோர் கூறியதாவது:

வரும் ஆகஸ்ட் 11 முதல் 16-ம் தேதி வரை, பக்தர் களை சர்வ தரிசனத்திற்கு முடிந்த அளவு அனுமதிப்பது என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இதில் எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது, எந்தெந்த நேரங்களில் அனுமதிப்பது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

ஆனால் சர்வ தரிசனம் மூலம் மட்டுமே சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். விஐபி தரிசனம், முதியோர், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தையுடன் வரும் பெற்றோர் போன்றோருக்கு அளிக்கப்படும் தரிசன சலுகைகள் முழுவதும் ரத்து செய்யப்படும். சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்படாது. மலையேறி வரும் பக்தர்களுக் கான திவ்ய தரிசனம் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

தேவஸ்தானத்தில் பணிபுரிந்து, சமீபத்தில் நீக்கப்பட்ட மிராசி அர்ச்சகர்களுக்கு ரூ.20 லட்சமும், பிரதான அர்ச்சகர்களுக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், காலை 11.30 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 7 முதல் 7.30 வரையிலும் விஐபி பிரேக் தரிசனம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் பக்தர்கள் தலா ரூ.250 கட்டணம் செலுத்தி தாயாரை தரிசிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x